வேறு 355. | கானாறு கற்பகக் காவுமூ வுலகுமக் | | காவென நிழற்றுமொற்றைக் | | கவிகையுங் குணதிசைக் காவலும் பிறவுமுள | | காணியுங் காணியாக | | வானாறு கோட்டிமய மலைவயிறு வாய்தத்லை | | மகளுக்கு மணமகற்கும் | | மருமகளை யுரியதன் திருமக ளெனப்பெற்ற | | மாமடிக ளைத்துதிப்பாம் | | பானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென் | | பைங்குவளை வாய்குதட்டும் | | பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம் | | பாலாறு பங்கயச்செந் | | தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு | | சித்தாமிர் தஞ்சிவபிரான் | | சீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ | | |
356. | மானிறக் கடவுடிரு மறுமார்பி ன்றவிரி | | வனத்துழாய்க் காடுமூடி | | மாயிருள் வழங்குதன் றிருமாளி கைக்கந்தண் | | மணிவிளக் கிட்டுமுட்டாட் |
355. (அடி, 1) தெய்வயானையம்மையைத் தன் மகளாகப் பெற்றமையின், கற்பகக்கா முதலியன அலைவின்றி இந்திரனுக்கே உரியனவாயின. காணி - உரிமை (384).
(2) மருமகளென்றது தெய்வயானையம்மையை. மாமடிகள்: பெண்ணைக்கொடுத்த மாமனை மாமடிகளென்றல் மரபு (547); “மந்தணமிருது புரி மாமடிதன் வேள்வி, சிந்தவிளை யாடுசிவ லோகன்"(தே.) (3) மடு - மடுக்களில். மடியாகிய மடை (324.)
(4) சித்தாமிர்தம் : கோயிலுக்குள் அம்பிகையின் சந்நிதிகு முன்னுள்ள விசேட தீர்த்தம். பாலாறு சீர்த்திக்கும், தேனாறு பிரதாபத்திற்கும் உவமைகள்; சீர்த்தி - மிகுபுகழ். புகழுக்கு வெண்ணிறமும் பிரதாபத்திற்குச் செந்நிறமும் கூறுதல் கவி மரப். தினகரபுரி: இத்தலத்தின் பெயர்.
(முடிபு.) தேவதேவனைக் காக்கவென்று மாமடிகளைத் துதிப்பாம்.
356. (அடி, 1) மால் - மேகம். திருவாகிய மறுவையுடைய மார்பு.
|