| கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க் | | கதவந் திறந்தளித்தும் | | காதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த | | கன்னிகையை யஞ்சலிப்பாம் | | மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை | | வெள்ளமொடு கள்ளமனமும் | | மெய்யுமிரு ளத்திரளு மவுணக் கருங்கங்குல் | | விடியக் கடுங்குரல்விடும் | | தீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண் | | சிறைமயிற் பரிநடாத்தும் | | சேவகப் பெருமாளை வேதபுரி வருமிளஞ் | | |
357. | துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் | | சுதைநிறஞ் சிதைவுறாமே | | தொன்மறை கனிந்தூறு மண்பனீ ரூறலிற் | | றூத்துகி ன்னைப்புறாமே | | நறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது | | நன்னெஞ் செனக்குடிபுகும் | | ஞானப் பிராட்டியைச் சொற்கடற் றெள்ளமுதை | | நாத்தழும் பத்துதிப்பாம் |
(பரி.1:36, 4:59.) நற - தேன். மணிவிளக்கு - இரத்தின தீபத்தை.
(அடி, 1-2) கவுத்துவம் சூரியன் போன்று விளங்குகின்ற தென்றபடி. மணிவிளக்கிட்டும், கதவந்திறந்தும் காதன்மை காட்டும்.
(3.) இருள - இருளா நிற்ப அவணக் கருங்கங்குல் - அசுரராகிய கரிய இருளையுடைய இரவு.
(4) குடுமி - சூட்டு. சேவகம் - வீரம்.
(முடிபு.) சேயைப் புரக்கவென்று, கன்னிகையை அஞ்சலிப்பாம்.
357. (அடி, 1) சுதை நிறம் - வெண்ணிறம். அண்பல் - பிரமதேவனுடைய மேல்வாய்ப்பால். (பி-ம்.) ‘அன்பனீர்’.
(1-2) வெண்டாமரையிற் குடிபுகுந்தமையால் சுதைநிறம் சிதைதலும் துகில் நனைதலும் இல்லையாயின. பொகுட்டிற் குடிபுகும் என்க. ஞானப்பிராட்டியை - ஞானத்தை அளிப்பவளை. சொற்கடலிற் றோன்றிய அமுதை.
|