பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்267

சிறைபட்ட தண்டுறைசை சித்தாமிர் தப்பெருந்
   தீர்த்தந் திளைத்தாடிய
செஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளிற்
   றெள்ளமுத மயமாகலான்
உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய்
   உண்ணச் சகோரம்வெஃகும்
ஓங்கெயிற் பருதிபுரி முருகனைச் சண்முகத்
   தொருவனைக் காக்கவென்றே.    
(9)


சந்த விருத்தம்
358.
பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள்
   பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள்
   படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள்
   எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள்
   எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்

    (3) செஞ்சுடர்க்கடவுள் - சூரியன். வெண்சுடர்க்கடவுளின் - சந்திரனைப்போல.

    (4) உறை - துளித்தல். அளவளாய் - கலந்து. சகோரம் என்னும் பறவை நிலவையுண்பது.

    (3-4) சித்தாமிர்த்ததில் நீராடிய விசேடத்தால் சூரியன் அமுதமாயினன். பருதிபுரி : சூரியன் இத்தலத்தில் வழிபட்டமையை இப்பெயர் வலியுறுத்துகின்றது.

    (முடிபு.) சண்முகத் தொருவனைக் காக்கவென்று தெள்ளமுதை நாத்தழும்பத் துதிப்பாம்.

    358. (சந்தக்குழிப்பு.) தனதன தனதன தானத் தனத்தன.

    (அடி, 1) தெரித்தவள்: அபிராமி; இப்பெயர் பிராமியென்றும் வழங்கும். சிரித்தவள்: மாகேசுவரி, பணித்தவள்: கௌமாரி. பனிவரை - கிரௌஞ்சமலை. குனித்தவள்: நாராயணி.

    (2) பெயர்த்தவள்: வாராகி. குலிசம் - வச்சிராயிதம். தரித்தவள்: இந்திராணி. கரத்தினள் : காளி.