| கயறிரி சரவண வாவிக் கரைக்குரை | | கழலொடு பரிபுர மோலிட் டிடக்கட | | களிறொடு களிறெதிர் மோத்த் திசைத்திசை | | கடுநடை யுளதக ரேறச் சமர்த்தனை | | முயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு | | முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி | | முகிறொடு தடமதில் வேதப் பதித்தனி | | முதல்வனை யறுமுக வேளைப் புரக்கவே. |
வேறு 359. | முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு | | சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும் | | முடித்தலை யடித்தலை பதித்தெதிர் துதித்தவர்த | | முக்குக் கொடுத்தானை மாதிரமொ ரெட்டையும் | | இறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல | | சத்திக்க ரத்தானை யூதியமெ னத்தனை | | இருப்பினு நடப்பினு நினைப்பவ ரிருக்கவெமர் | | சித்தத் திருப்பானை யாறிருபு யத்தனை | | வெறுப்பொடு விருப்பினை யறுத்தவ ருளத்துமலர் | | பத்மப் பத்ததானை வேதபுரி யிற்சின | | விடைக்கொடி வலத்தினு மடக்கொடி யிடத்துமுள | | முக்கட் டிருத்தாதை யார்பணிகு ருக்களை |
(3-4) தகர் ஏறு அச் சமர்த்தனை. முழுமதி துவசத்தால் குறைமதியாயிற்று.
(முடிபு.) அறுமுகவேளைப் புரக்க, எழுவர்கள் தாளைப் பழிச்சுதும்.
359. (சந்தக்குழிப்பு.) தனத்தன தனத்தன தனத்தன தனத்தனன் த்ததத் தனத்தான தானதன தத்தன.
(அடி, 1) முறுக்கு - இதழ்களின் பிணிப்பு. சததளத்திருமலர் - நூற்றிதழ்த்தாமரை. முடித்தலையைத் திருவடியில பதித்து. பிரம்பதவி, இந்திரபதவி, திருமால் பதவிகளைத் தம்மை வழிபடும் அடியார்களுக்கு அளிப்பவரென்பது கருத்து (384, 415.)
(2) சக்தி - வேல். ஊதியம் என - இலாபமாக. தனையென்றது முருக்க் கடவுளை. இருப்பினும் நடப்பினும் நினைப்பவர்: “நின்று திருந்துங் கிடந்து நினைமினுகள், என்றுஞ் சிவன்றாளிணை”. (3) மடக்கொடி - உமாதேவியார். குருக்களை - ஆசிரியரை.
|