| மறைக்கிழ வனைத்தலை புடைத்துல கனைத்தினையும் | | ஒக்கப்படைத்தானை மூவிருமு கத்தனை | | மருத்துவர் வசுக்கதி ருருத்திர ரெனப்பொலியு | | முப்பத்துமுக்கோடி தேவர்கள் புரக்கவே. |
2. செங்கீரைப்பருவம்
360. | இருக்கோ லிடும்பரி புரக்கோல முந்நுதலில் | | இட்டபொட் டுஞ்சுட்டியும் | | எரிமணிப் பட்டமுங் கட்டுமொன் னரைஞாணும் | | இளஞாயி றுதயஞ்செயும் | | உருக்கோல முஞ்சூழி யக்கொண்டை யும்முச்சி | | உச்சியும் வாளிமுத்தும் | | ஒள்ளொளி த்தும்புங் குதம்பையுங் கண்டுகண் | | டோடரிக் கண்களிக்கும் | | மருக்கோல நீலக் குழற்றைய லாட்கரு | | மருந்தா யிருந்ததெய்வ | | மக்கோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குன | | மடந்தைமு னடந்துமற்றத் |
(4) மறைக்கிழவன் - பிரமதேவன். ஒக்க - ஒருங்கே. மருத்துவர் - அசுவினி தேவர் இருவர். வசு - அட்டவசுக்கள். கதிர் - துவாதசாதித்தர். உருத்திரர் - ஏகாதச ருத்திரர். புரக்க - பாதுகாத்திடுக.
(முடிபு.) கொடுத்தானை, கரத்தானை, இருப்பானை, புயத்தனை, பத்மப் பத்ததானை, குருக்களை, படைத்தானை, முகத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்கள் புரக்க.
360. (அடி, 1) இருக்கு - வேதம். ஓலிடும் - ஓலமிடும்; ஓல்: கடைக்குறை. பரிபுரம் - காலணி வகையுள் ஒன்று. கோலம் - அழகு.
(2) உருக்கோலம் - திருவுருவத்தின் அழகு. திருமேனிக்கு இள ஞாயிறு உவமை; “உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கணை டாஅங், கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி” (முருகு.) சூழியக்கொண்டை - ஒருவகைக் கொண்டை; இது சூழியெனவும் வழங்கும் (365.) முச்சி - உச்சிக் கொண்டை (365) வாளி - மேற் காதிலுள்ள ஓரணி. குதம்பை - தக்கை; காதை வளர்த்தற்காக அணியப்படுவது.
(3-4) மரு - நறுமணம். தையலாள்: இத்தலத்து அம்பிகையின் திருநாமம். அருமருந்து: (364.) குறமடந்தை - வள்ளி
|