| திருக்கோல முடனொரு மணக்கோல மானவன் | | செங்கீரை யாடியருளே | | செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள | | |
361. | கும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாக் | | கொண்டவகி லாண்டங்களின் | | குழுவுக்கு மற்றுத்த மிருவர்குறி யுந்தலைக் | | கூடினுந் தான்றனக்கச் | | சொம்பாதி யன்மைக் கனைத்துந்தன் மயமெனும் | | சுருதிகரி யாவைத்துமச் | | சுருதிக்கு மெரிசுடர்ப் பருதிக்கு மிரவிகுல | | தோன்றற்கு மிளவலுக்கும் | | சம்பாதி யொடுநற் சடாயுவுக்கும்பெருந் | | தவமுனிவ ரெழுவருக்கும் | | தண்ணளி சுரந்திட்ட தீராத வினைதீர்த்த | | தம்பிரான் றிருமேனியிற் |
நாயகியார். வள்ளி நாயகியின தந்தை தினைப்புனத்தில் இரண்டாமுறை வந்தபோது முருகக் கடவுள் கிழவுருவங்கொண்டதும், பின்பு அவளை விநாயகர் திருவருளால் அடைந்து மணக்கோலமானதுமாகிய செய்திகள் கந்த புராணம், வள்ளியம்மை திருமணப்படலம், 94-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
361. (அடி, 1) கும்பாதிகாரியமென - கும்பம் முதலிய பொருள்கள் குயவன் முதலியோரை நிமித்த காரணமாகக் கொண்டாற் போல. தமை நிமித்தமாகக் கொண்ட - சிவம் சத்திகளாகிய தங்களை நிமித்தக் காரணமாகக் கொண்ட. குழுவுக்கு - தொகுதிக்கு. தாம் நிமித்த காரணமென்பதை அறிவிப்பற்கு. இருவர் குறி - ஆண் பெண்ணென்னும் சின்னங்கள். கூடினும் - கூடினாலும்; அதனால் அமைதி பிறவாமல்.
(2) சொம் - சொத்துக்கள்; “சொம்மனை வைத்தெப் படி நடப்பீர்” (633.) பாதியன்மைக்கு - சிவத்திற்கு உரியபாதியும தனக்கே யுரியதென்பதைத் தெரிவித்தறபொருட்டு. அனைத்தும் தன்மயமென்னும் சுருதி - ‘ஸர்வம் சக்திமய’ மென்னும் வேத வாக்கியத்தை (86). கரி - சாட்சி. தோன்றல் - இராமன். இளவல் - இலக்குவன் (364).
(3) சம்பாதி முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றோர். சம்பாதி சடாயு வழிபட்டதை, “தள்ளாய சம்பாதி சதாயென்பார் தாமிருவர், புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே” (தே.)
|