பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்271

செம்பாதி யுங்கொண்ட டையனா யகிகுமர
   செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
   செங்கீரை யாடியருளே.    
(2)

362.
கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக்
   களிற்றோடு முட்டவிட்டுக்
ககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை
   திகிரிவட் டத்திலித்து
முக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த
   வேதண்ட மாதண்டமா
மூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி
   மூரிக் கடாசலமவன்
மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட
   மேகபட லத்துமொண்டு
மேல்கட லினைக்கெருங் கீழ்கடல் புகப்பெய்து
   விளையாட்டு வீரர்களொடும்
திக்கவட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள்
   செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
   செங்கீரை யாடியருளே.    
(3)

என்பதனால அறிக. தீராத வினை தீர்த்த தம்பிரான்; 449; “வேளூரர், எந்தவினை தீர்த்தா ரிவர்” (தனிப்.) என ஒரு புலவர் நிந்தாத்துதியாகக் கூறியது இப்பெயரை நினைப்பிக்கின்றது. செம்பாதி - நேர் பாதி : குறைவும் கூடுதலும் இல்லாத பாதி.

    362. முருகப் பெருமான் திருவிளையாடல்கள் இதிற் கூறப்படும்.

    (அடி, 1) பருதி வட்டம் - சூரிய மண்டலம். திகிரி வட்டம் - சக்கரவாளகிரி (34.)

    (2) கோதண்டம் - வில். வேதண்டம் - மேருமலை. மா தண்டமா - பெரிய தண்டாயுதமாகக் கொண்டு. அண்டகூடம் அண்டத்தின் உச்சியை. த்ரிகூடம் - திரிகூடமலை. மூரி - பெரிய. கடாசலம் - யானை; இது முனிவர் வேள்வியிற் பிறந்தது.

    (3) நேரிட்டிடப்பட்ட - ஒத்த. மேக படலத்து - மேகக் கூட்டத்தால். யானைத்தோல் மேகபடலத்துக்கு உவமை (வெங்கைக். 15.) வீரர் - நவவீரர் முதலியோர். மொண்டு பெய்து விளையாடு சேனாபதிக் கடவுளென்க.