பக்கம் எண் :

272குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

363.
மைவிழிச் செங்கமல வல்லிக்கு நேமியான்
   மணிமார்பு வாணிக்குநான்
மறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும்
   வயித்தியக் கடவுளார்க்கு
மெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு
   வேதச் சிரங்கடுப்ப
வேதபுரி கந்தபுரி புள்ளூ ரெனப்பொலியும்
   வேளூர திசைதிசைதொறும்
கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங்
   கயிலைத் தடஞ்சாரலும்
கனகாச லத்தும்வள ரியமா சலத்துமுயர்
   கந்தமா தனவெற்பெனத்
தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு
   செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
   செங்கீரை யாடியருளே.    
(4)

364.
மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி
   வில்லியா ரிளவலோடும்

    363. (அடி, 1) மறை முதலி - மறைக்கு முதல்வன்; முதலி: மூவர் முதலியென்றது போன்ற வழக்கு இது.

    (2) வேதச்சிரம் - உபநிடதம். கடுப்ப - ஒப்ப.

    (1-2) திருமாலின் மார்பு முதலியவற்றைத் திருமகள் முதலியோர் தமக்கு இடமாகக் கொண்டாற்போல வேளூரை இடமாகக் கொண்டோயென்பது கருத்து.

    (3) கைவகுத்து - பிரிவு செய்து கொண்டு. குரவை யாட்டு - கை கோத்து ஆடுதலை. சாரலும் - சாரலிலும், கந்தமாதன வெற்பு - கயிலையைச் சார்ந்துள்ளதும் முருகக் கடவுளுக்குரியதுமான ஒருமலை (இலஞ்சியுலா, 129; தணிகையுலா, 93); தேவார வைப்புத்தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது; ‘கந்த மாதனங் கயிலைமலை கேதாரம்” (தே.) வெற்பென - வெற்பில் விளையாடுவது போல.

    (4) மழகளிறு : அண்மை விளி.

    (3-4) கந்தமாதன வெற்பில் விளையாடுவதுபோலக் கயிலைச் சாரலிலும், கனகாசலத்திலும், இமயாசலத்திலும் விளையாடும் மழகளிறென இயைக்க.

    364. முருகக் கடவுள் மிகப் பெரியவராயிருந்தும் வள்ளி நாயகியின்பால் ஈடுபட்டு ஒழுகியது இதில் கூறப்படுகின்றது.