| விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை | | வெள்ளமென வீற்றிருக்கும் | | ஆனே றுயர்த்திட்ட வையற்கு மம்மைக்கும் | | அருமருந் தாகிநின்ற | | ஆதிப் பிரானென்று மும்மதற் கடவுளும் | | அடித்தொழும் பாற்றமற்றக் | | கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண் | | குறிப்பறிந் தருகணைந்துன் | | குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் | | குறையிரந் தவடொண்டைவாய்த் | | தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் | | செங்கீரை யாடியருளே | | செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள | | |
வேறு 365. | செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு | | சிலம்பு கலந்தாடத் | | திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி | | திகழரை வடமாடப் | | பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு | | பண்டி சரிந்தாடப் |
(அடி, 1) குண்டு - ஆழம். அகழியென்றது கடலை. வில்லியார் - இராமன். இளவல் - இலக்குவன். சடாயுபுரி: சடயு வழிபட்டமையின் இத்தலத்திற்கு இப்பெயர் அமைந்தது. வீறு - வேறொருவர்க்கு இல்லாத பெருமை.
(2) ஐயன் : சிவபெருமான். மும்முதற் கடவுள் - பிரமன் முதலிய மூவர். ஆதிப்பிரானென்று அடித்தொழும்பாற்றவென இயைக்க (389.)
(3) மதி - பிறை. குறப்பெண் - வள்ளிநாயகி. பணிக்க என - கட்டளை யிடுகவென்று. தொண்டை - கொவ்வைக்கனி.
(4) வாயூறி நின்றவன் - மிக்க விருப்பங்கொண்டு நின்றவன்; விளி. “வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப், பாதா குறமின் பதசே கரனே” (கந்தரனுபூதி) என்றார் அருணகிரிநாதரும்.
365. (அடி, 1) அரைமணி - அரையில் அணியும் ஒருவகை ஆபரணம்; இஃது உடைமணியெனவும் வழங்கும் (திருச்சிற். 385.)
(2) பண்டி - வயிறு.
|