பக்கம் எண் :

274குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச்
    சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை
    காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக்
    கதிர்முத் தொடுமாட
அம்பவ ழத்திரு மேனியு மாடிட
    ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
    ஆடுக செங்கீரை.    
(6)

366.
குழையொடு குழையெதிர் மோதிக் காதணி
    குண்டலம் வெயில்வீசக்
குமுத விதழ்க்கனி வாயமு தூறிய
    குறுநகை நிலவூர
முழுவயி ரப்புய வலயமு முன்கை
    முதாரியு மொளிகால
முத்த மரும்பி யெனக்குறு வேர்வு
    முகத்தி லரும்பியிடப்
புழுதி யளைந்த பசுந்திரு மேனிப்
    பொங்கொளி பொங்கியெழப்
புண்டரி கங்கண் மலர்ந்த விழிக்கடை
    பொழியருள் கரைபுரள

    (3) குழை காது - வடிந்த காது. சூழி - சூழியக் கொண்டை (360.) முச்சி - உச்சிக் கொண்டை.

    (4) பவழத் திருமேனி; “பவழத் தன்ன மேனி” (குறுந். கடவுள்.) வயித்திய நாதமென்று வேறுதல முண்மையின், வேறுபாடு அறிதற்கு இதை ஆதி வயித்திய நாதபுரி யென்றார்.

    366. (அடி, 1) குழை வேறு குண்டலம் வேறு. அமுதூறிய - அமுதூற (367.)

    (2) புயவலயம் - வாகுவலயம்; வயிரம் அதற்கு அடை. முதாரி - முன்கைக் கங்கணம். அரும்பியிட - தோன்ற.

    (3) புண்டரிகங்கள் மலர்ந்த - செந்தாமரை போல் மலர்ந்த ; ‘புண்டரீகமென்பது செந்தாமரைக்கும் பெயர்; புண்டரீகாட்சனென்ப’ (தக்க. 22, உரை) என்பதையும் அதன் விசேடக் குறிப்பையும் பார்க்க.