பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்275

அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி
    ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
    ஆடுக செங்கீரை.    
(7)
367.
விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய
    மெல்லிதழ் புலராமே
விம்மிப் பொருமி விழுந்தழு தலறியுன்
    மென்குரல் கம்மாமே
கரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக்
    கண்மலர் சிவ்வாமே
கலுழ்கல் ழிப்புன லருவி படிந்துடல்
    கருவடி வுண்ணாமே
உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி
    னொண்பத நோவாமே
ஒருதா ளுந்தி யெழுந்திரு கையும்
    ஒருங்கு பதித்து நிமிர்ந்
தருள்பொழி திருமுக மசைய வசைந்தினி
    தாடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
    ஆடுக செங்கீரை.    
(8)

    (4) இளங்கனி: “முக்கட் கனிகனி யுஞ்சுவையே” (375); “கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி” (தே.); “கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை” (திருவிசைப்பா); “கயறியாச் சவழுங்கனியே” (திருக்குற்றாலப். 16 : 36). இளங்கனி யென்றார், என்றும் இளையராதல் பற்றி; “என்று மிளையாய்” (முருகு. இறுதி வெண்பா.)

    367. (அடி, 1) விரலின் சுவையுண்டு; விரல் - பெருவிரல் (37). கம்மாமே - கம்மிக்கொள்ளாமல்.

    (2) அஞ்சனம் - மை. கலுழிப்புனல் - மையைக் கரைத்து வரும் கலங்கற் கண்ணீர்.

    (3-4) ஒருதாளுந்தி .....ஆடுக : செங்கீரை யாடுதலின் இலக்கணம்; “இருகைமல ரும்புவி பதித்தொரு முழந்தா ளிருத்தி யொரு தாண்மேனி மிரத், திந்த்ரதிரு விற்கிடை தொடுத்தவெண் டரளநிரை யேய்ப்பநுதல் வேர்பொடிப்பத், திருமுக நிமிர்த்தொரு குளந்தையமு தாம்பிகை செங்கீரையாடியருளே” (அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செங்கீரைப். 1.)