சந்த விருத்தம் 368. | கும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக் | | கொண்டல்வி ழிக்கயன் மீனுமி ரண்டே கொண்டேகிச் | | சம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற் | | சண்டைகொ ளற்கென நேர்வரு கெண்பா லன்பாயே | | அம்பவ ளக்கொடி யேவளர் கொம்பே யென்றேநீ | | அன்றுபு னத்துயிர் சோர்வது கண்டே முன்போதும் | | கம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை | | கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை. |
369. | திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும் | | செங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே யொன்றேயாய் | | எங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க் | | கின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே யெந்தாயின் |
368. (சந்தக் குழிப்பு.) தந்தன தத்தன தானன தந்தா தந்தான.
தன்னை வெல்லுதற்கு மன்மதன் ஆண்வடிவத்தை விட்டுப் பெண் வடிவங்கொண்டு வந்ததாக வள்ளிநாயகியை நோக்கி முருகக் கடவுள் கூறியது இது.
(அடி, 1-2.) யானை இரண்டு: நகில்கள். கொண்டல்: கூந்தல். ஏகிப்பொரு சேவகன் கொண்டு வந்தானென இயைக்க. சம்பரன்; ஓர் அசுரன்: இவனைக் கொன்றதனால் மன்மதனுக்குச் சம்பராரி யென்று ஒரு பெயர் உண்டாயிற்று. என - என்று நினைக்க. பெண்பால் - வள்ளி நாயகியினிடத்தே. “வெறுப்பினால், வேண்டுருவக் கொண்டதோர் கூற்றங்கொல் .... நல்கூர்ந்தார் செல்வ மகள்” (கலி. 56: 8-12); “பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம், ஆண்மையிற் றிரிந்துத னருந்தொழி றிரியாது.... பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென” (சிலப். 5:219-23) என்பவற்றைத் தழுவி வந்தது இது.
(3) புனத்து - தினைப்பனத்தில்.
(4) மதத்தர் - விநாயகர்.
369. (அடி, 1) கன்றே - குழந்தையே.
(2-3) எந்தாயின் ... வண்டே: உமாதேவியாருக்குச் சிவ பெருமான் உபதேசித்தபொழுது முருகக் கடவுள் அத்தேவியாருடைய கூந்தலில் வண்டின்வடிவாக இருந்து வேதமுதலியவற்றை அறிந்தனரென்று சைவ நூல்கள் கூறும்; “முன்பொரு நாள், நின்னுருவங் கோடலா னன்றே நெடு
|