| கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும் | | கொந்தள க்குற மான்வளர் குன்றே யென்றோதும் | | கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை | | கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை. |
3. தாலப்பருவம்
ஆசிரிய விருத்தம் 370. | பில்கும் பசுந்தே னசும்பிருந்த | | பின்றா ழளகத் தரமகளிர் | | பேதைக் குறும்பு விளையாடும் | | பேரா யத்துச் சிறுமருங்குற் | | கொல்கொங் கொடிபோய் நுடங்கியிட | | ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத் | | துயர்சூ ளிகையின் மரகத்ததின் | | ஒளிகால் வீசத் தெளிவிசும்பிற் | | பல்குஞ் சுரபி தரங்கநெடும் | | பாகீ ரதியின் கரைக்கிளைத்த | | பசும்புல் லெனச் செந் நாவளைக்கும் | | பைம்பொற்றலங்கள் பலகோடி | | மல்குஞ் செல்வக் கந்தபுரி | | வாழ்வே தாலோ தாலேலோ | | மலையாள் வயிறு வாய்த்தமுழு | | |
வேலான், முன்னிய வேத முழுதறிந்தான்” ( கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, 363-4.) குறமான் - வள்ளிநாயகி. மான்வளர்குன்றென்றது ஒரு நயம்.
(4) ஒருவகைச் சம்பந்தம் பற்றிக் கங்கையை முருகக் கடவுளுக்குத் தாயென்றும் அதனால் இவருக்குப் போந்த பெயர் காங்கேயனென்றும் கூறுவர்.
370. (அடி, 1-2) பில்கும் - துளிக்கும். பேதைக்குறும்பு - பேதைப்பருவத்து விளையாத்து. மருங்குற்கு ஒல்கும் கொடி - மென்மையிலும் துவட்சியிலும் இடைக்குத் தோற்று அசையும் பூங்கொடி. சூளிகை - மாளிகையின் உச்சியறை; சூடிகாவென்னும் வடமொழித்திருபு.
(3) சுரபி - காமதேனு. பாகீரதியின் - ஆகாய கங்கையின். மரகத்ததின் ஒளியைப் புல்லென்று எண்ணிக் காமதேனு தன் நாவை நீட்டியது. இது திரிபதிசயவணி.
|