பக்கம் எண் :

278குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

371.
தொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள்
   தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத்
தோன்றும் பருதி மணித்திண்டேர்
   தூண்டுங் கலின வாம்பரியை
முடுக்குஞ் சுடர்ப்பொற் றலத்திழைத்த
   முழுநீ லத்தி னொழுகொளியின்
முழுகுங் கடவுண் மால்யானை
   முகிலிற் றோன்ற வகலிடநின்
றடுக்குங் களிறென் றரமகளிர்
   ஐயுற் றிடத்தன் வெளிறுமுடம்
பளறு படிந்த தெனக்கங்கை
   யாற்றுப் பசும்பொ னசும்புபுனல்
மடுக்குஞ் செல்வக் கந்தபுரி
   வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
   மணியே தாலோ தாலேலோ.    
(2)

372.
தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத்
   திரண்மா மணிகள் வெயில்விரிக்கும்
செம்பொற் றலத்துப் பேரமர்க்கட்
   சிறியார் நறிய வகிற்புகையிட்
டாற்றுங் குழற்காட் டினைப்புயலென்
   றாட மயில்கண் டம்பவளத்

    371. (அடி, 1) தொடை - மாலை. தொடு நீர்ப்பரவை - சகரரால் தோண்டப்பட்ட கடல் (373). புழுங்க - வெம்மையையடைய. கலினம் - கடிவாளம்.

    (1-2) துகிற்கொடிகள் பரியை முடுக்கும் (49.) கடவுள் மாலை யானை - ஐராவதம். அது நீல மணியின் சோதியினால் கருமையகத் தோற்றியது. அகலிடம் - பூமி.

    (2-3) தெய்வமகளிர் தன்னைப் பூமியிலுள்ள கரிய யானையென்று ஐயுறுவதை யறிது அந்த வெள்ளையானை தன்மேல் கரிய சேறு படிந்ததாக எண்ணிக் கங்கையில் மூழ்கியது.

    372. (அடி, 1) தீற்றும் - பூசப்படும். சுதை - சுண்ணாம்புக் குழம்பு. சிறியார் - இளைய மகளிர்.

    (2) மயில் ஆட என மாறி இயைக்க; கூந்தலை மேகமென்றெண்ணி மயில் ஆடியது. புன்னகையை நிலவெனக் கருதிச் சகோரம் அருந்தியது.