பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்279

தரும்பு நகையைச் சகோரப்புள்
   அருந்த விரிந்த முழுநகைவிண்
டூற்று நிலவுக் கிந்துசிலை
   ஒளிர்மா ளிகையுஞ் சூளிகையும்
உருகிப் பெருகுங் கலுழிவெள்ளம்
   உவரோ டுவரிக் கடற்புலவு
மாற்றுங் கடவுட் கந்தபுரி
   வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
   மணியே தாலோ தாலேலோ.    
(3)

373.
கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங்
   கிடங்கென் றுடங்கர் மாவியங்கும்
கீழ்நீ ரழுவக் குண்டகழிக்
   கெழுமு புனற்றெண் டிரைமேய்ந்து
திளைக்குங் கமஞ்சூ னெடும்புயலைச்
   சிறுகட் பெருங்கைப் பகடென்றோர்
செங்கட் களிறு பிளிறநிமிர்
   திகிரி கிரியென் றிவர்ந்துடலம்
இளைக்கும் படிவிண் டொடநிவந்த
   எழிற்பொற் புரிசை விண்டுபதத்
தேறு மேணி பொற்றருவுக்
   கிடுவே லியுமா யேழுலகும்

    (2-3) முழுநகை விண்டு ஊற்றும் நிலவுக்கு; விந்து - வெளிப்பட்டு.முழுநகையில் உண்டாகிய நிலவினால் சந்திரகாந்தக்கல் உருகியது. உவரோடு புலவை மாற்றும் (அடி, 4.)

    373. (அடி, 1) பெருங்கிடங்கென்றது கீழ்க்கடலை. இடங்கர்மா - முதலையாகிய விலங்கு; முதலையை மாவென்பது ஒரு சாரார் கொள்கையாதலின் (இறை. சூ. 1, உரை.) இடங்கர்மா என்றார். கீழ்நீர் - ஊற்று நீரையுடைய. அழுவம் - பரப்பு. மேய்ந்து - உண்டு என்னும் பொருளது; “களிற்றீட்டம் போற், கலங்கு தெண்டிரை மேய்ந்து” (சீவக. 32.)

    (2) கம சூல்; கம - நிறைவு. புயலைப் பகடென்று கருதி; பகடு யானை. களிறு பிளிற - ஓர் ஆண்யானை முழங்க. திகிரிகிரியென்று - சக்கரவாளமலை என்று மதிலை நினைந்து. இவர்ந்து - மதிலின்மீது ஏறி.

    (3) மேகம் இளைக்கும்படி. விண்டுபதம் - ஆகாயம். பொற்றரு - கற்பக மரம்; “கால்கிளர் விசும்பிற் கற்பகா (3) மேகம் இளைக்கும்படி. விண்டுபதம் - ஆகாயம். பொற்றரு - கற்பக மரம்; “கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு, வேலியிட்டன்ன வியன்மணிப் புரிசையும்” (566:24-5.)