பக்கம் எண் :

280குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வளைக்குங் கடவுட் கந்தபுரி
   வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
   மணியே தாலோ தாலேலோ        
(4)

374.
சோலைப் புறமுப் புடைக்கனிகள்
   தூக்கு முடத்தெங் கிமையவர்தம்
தோன்ற றிருவோ லக்கத்துத் 
   தோகை மயிலி னடங்குயிற்றும்
ஏலக் கருங்கொந் தளவளகத்
   திளமா தருக்கு முதிர்வேனில்
இளைப்பாற் றுதற்குத் தாற்றொடுஞ்செவ் 
   விளநீர் கொடுப்ப வீற்றுளைந்த
காலப் புயலின் முகந்துடைக்கும்
   கமுகு பழுக்காய்ப் பவழமுடன்
கதிர்முத் திட்டுச் செழும்பாளைக்
   கற்றைக் கவரி புடையிரட்டும் 
மாலைப் பழனப் பருதிபுரி 
   வாழ்வே தாலோ தாலேலோ 
மலையாள் வயிறு வாய்த்தமுழு 
   மணியே தாலோ தாலேலோ.    
(5)

    (3-4) புரிசை வளைக்கும்; புரிசை - மதில்.

    374. (அடி, 1) முப்புடைக் கனிகள் - தென்னம் பழம். “தென்னம் பழம்வீழ் சோணாடா” (424); “காய்மாண்ட தெங்கின பழம்வீழ” (சீவக. 31.) முடத்தெங்கு; எழுவாய். இமையவர்தம் தோன்றல் - இந்திரன். திருவோலக்கத்து - அத்தாணி மண்டபத்தில். மயிலின் - மயிலைப் போல.

    (2) ஏலம் - மயிர்ச்சாந்து. கொந்தள அளகம் - கொத்தாகிய முன்னுச்சி மயிர். இளமாதருக்கு - இளைய அரம்பையருக்கு. தாறு - காய்க்குலை. இளைப்பாற்றுதற்குக் கொடுப்ப. ஈற்று உளைந்த - ஈனுதலால் வருந்திய.

    (3) கதிர்முத்தென்றது பாளையிலுள்ள பூ வரும்புகளை. பாளையாகிய கவரியை. மாலை - வரிசை.

    (1-4) தெங்கு இளநீர் கொடுப்பக் கமுகு அரம்பையருக்குக் கவரி புடையிரட்டும் பழனமென்க. கமுகு கவரி வீசுதல்: 58.