பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்281

வேறு
375.
மாலி மயத்து மடப்பிடி பெற்று
   வளர்த்த விளங்களிறே
மழவிடை யேதிரு மாமடி கட்கென
   வைத்த கவுத்துவமே
மூல மெனக்குல நான்மறை யோலிடு
   முழுமுத லேமூவா
முக்கட் கனிகனி யுஞ்சுவை யேதனி
   முத்திக் கொருவித்தே
காலை யிளங்கதி ருக்கெதிர் முதிரும்
   கதிர்செம் பவளமுடன்
கதிர்முத் திட்டுவ ணங்கக் கன்னல்கொல்
   கமுகுகொ லெனவளரும்
சாலி வயற்றிமிழ் வேளூ ரடிகேள்
   தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் றலைமைப் புலவா
   தாலோ தாலேலோ     
(6)

376.
கருமுகி லுக்கரி தாமடி வாரம்    
   கண்டிரு பறவைகடம்    

    375. (அடி, 1) மாமடிகளென்றது திருமாலை; 355-ஆம் செய்யுட் குறிப்பைப்பார்க்க. திருமாலுக்குக் கவுத்துவம் விருப்பமுடையதாதலின் இவரைக் கவுத்துவ மென்றார்.

    (2) ஓலிடும் - ஓலமிடும். முக்கட் கனி - சிவபெருமான்.

    (3) கதிர்முத்து : 354, பார்க்க. பெரியோரைக் கண்டால் காணிக்கைப் பொருளையிட்டு வணங்குதல் மரபென்பது இங்கே அறியற்பாலது. நெற்பயிருக்குக் கரும்பும் கமுகும் உவமைகள்; கன்னல் - கரும்பு.

    (4) சாலி - நெற்பயிர். சங்கத் தமிழின் தலைமைப் புலவா: தலைச் சங்கத்தில் முருகக் கடவுள் இருந்து தமிழாராய்ந்தமையினி இங்ஙனம் கூறினார்; “அவருள் தலைச்சங்க மிருந்தார் .............குன்றெறிந்த மருகவேளும் ........என இத் தொடக்கத்தார் .......என்ப” (இறை. 1. உரை.)

    376. (அடி, 1-2) சிவபெருமானைப் பொன்மலையாக உருவகம் செய்கின்றார். கருமுகிலுக்கு - திருமாலுக்கு. அடிவாரம் - திருவடி, மலையின்