பக்கம் எண் :

282குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கண்களி பொங்கவொர் பறவை முடித்தலை
    காணா துட்குவரப்
பொருபுன லருவித் தலையின் மிசைத்தவழ்
    புதுமதி நிலவொழுகப்
புள்ளூ ரிற்பொலி வெள்ளி மலைக்கட்
    பொன்மலை யைக்குவவு
குருமணி வயிரப் புயமெனு மெட்டுக்
    குவடுஞ் சுவடுபடக்
குத்திப் பொருமிரு கோடு படைத்ததொர்
    கூந்தற் பிடிபெற்றுத்
தருமொரு தொந்தித் தந்திக் கிளையாய்
    தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் தலைமைப் புலவா
    தாலோ தாலேலோ.    
(7)

377.
உண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட
    ஒளிவிடு முழுமணியே
உயர்மறை நூல்கலை முடிவின் முடிந்திடும்
    ஒழுகொளி மரகதமே

அடிவாரம். மேகத்தினால் காணப்படாத அடிவாரமென்றது ஒரு நயம். இருபறவை - சம்பாதியும் சடாயுவும். ஓர் பறவை - பிரமதேவராகிய அன்னப் பறவை. உட்குவர - அஞ்ச. அருவி - கங்கை. வெள்ளிமலைக்கட் பொன்மலை - கைலைமலையினிடத்து எழுந்தருளியுள்ள பொன்மலையைப்போன்ற சிவபெருமான். குவவு - திரட்சி.

    (3) பிடி - அம்பிகை.

    (4) தந்தி - யானை.

    பொன்மலையவன்று உருவகஞ் செய்ததற் கேற்ப, அதன் அடிவாரம் மேகத்தால் அறிதற்கரியதெனவும், அன்புள்ள இரண்டு பறவைகளால் அறிந்து மகிழ்தற்குரியதெனவும். ஒரு பறவையினாலை காணுதற்கரிய முடியை உடையதெனவும், அருவியும் நிலவும் சிகரத்தில் உடையதெனவும், எட்டுக் குவடுகளைக் கொண்டதெனவும், அவை ஓர் யானையின் கொம்பாற் குத்தப்படுவன வெனவும் கூறினார். அம்மலையைக் குத்தும் பெண்யானையாற் பெறப்பட்ட யானைக்கு இளையோயென்று முடித்தனர்.

    377. (அடி, 1) இருள் - அஞ்ஞானம். கலை - ஆறு சாஸ்திரங்களும் வேறு பல கலைகளும். கலைமுடிவில் முடிந்திடும் - ஆடையின் தலைப்பில் முடியப்படுமென்பது வேறு பொருள்.