பக்கம் எண் :

284குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

379.
ஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ
    ஓதாது ணர்த்திடு போதா தாலோ தாலேலோ
ஆனாவ ருட்கனு பானா தாலோ தாலேலோ
    ஆயாத சொற்சொலு பாயா தாலோ தாலேலோ
நானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ
    நாதாதி கட்கனு பூதா தாலோ தாலேலோ
தேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ
    சேனாப திப்பொரு மாளே தாலோ தாலேலோ.    
(10)

4. சப்பாணிப் பருவம்

380.
முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு
    முளரிப் பிராட்டிவைத்து
முத்தாடு பச்சைப் பசுங்கிள்ளை யெனமழலை
    முதிருமென் குதலைகற்பத்
தொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்க்கிற்
    றூம்மொடு தாம்மிட்டுச்
சுடிகைநுதல் வெயர்வுந் துடைத்தொழுகு கத்தூரி
    தூரியங் கொண்டு தீட்டிக்
குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு
    கூரவஞ் சனமெழுதிமென்
கொங்கைத் தடத்துப் பசுங்களப மப்பியவள்
    குற்றேவன் முற்றுமாற்றித்

    379. (அடி, 1) ஓதாது உணர்த்திடு போதன் - மௌன தேசிகன்.

    (2) அனுபானா - துணையாக உள்ளவனே. ஆயாத - ஆராய்ச்சி செய்தற்கியலாத.

    (3) அரிது - அரிய பொருள். அனுபூதன் - காரணன்.

    380. முருகக் கடவுள் வள்ளி நாயகியாரைப் பலவகையாக உவப்பிக்கும் செய்தி கூறப்படும்.

    (அடி, 1-2) முடங்கும் திரை - மடங்கும் அலை. முளரிப் பிராட்டி - திருமகள். முத்தாடுதல், முத்தமிட்டுப் பாராட்டுதல். வள்ளிநாயகி திருமாலுக்கு மகளாதலின் திருமகள் முத்தாடுவதாக்க் கூறினர். முத்தாடு குறப்பாவை, தொடங்குங் குறப்பாவை என்க. தூரியம் - எழுதுகோல்; இது தூரிகை யெனவும் வழங்கும்.

    (3) குடங்கை - உள்ளங்கை. குடங்கைக்கடங்கா நெடுங்கண்; 404. கூர - மிகும்படி. (பி-ம்.) ‘கொங்கை தடத்தும்’.