| தடங்குங் குமப்புயங் கொட்டிநட மிட்டவன் | | சப்பாணி கொட்டியருளே | | தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை | | |
381. | மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு | | மதரரிக் கெண்டையுண்கண் | | மான்கன்றை யமருலகு வாழப் பிறந்திடு | | மடப்பிடியை வானவில்லைக் | | குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு | | கொடுப்பக் குடங்கையேற்றுக் | | கொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பவக் | | கொம்புமின் கொடியினொல்கி | | இழைக்கும் பசும்பொற் பசும்பென வசும்புபொன் | | னிளமுலை முகங்கோட்டிநின் | | றெய்யாமை நோக்கும் படைக்கட் கடைக்கணோக் | | கின்னமுத மூற்றவின்பம் | | தழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன் | | சப்பாணி கொட்டியருளே | | தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை | | |
(4) புயங் கொட்டியது களிப்பின் மிகுதியால்.
381. தெய்வயானை யம்மையாரை மணந்தருளிய செய்தி கூறப்படும்.
(அடி, 1) மழைக் கொந்தளம் - மேகம் போன்ற கூந்தல். கொண்டளத்தையும் சாயலையும் கண்ணையும் உடைய மான்கன்று; தெய்வயானை யம்மையார். வானவில் - இந்திரவில்.
(2) குழைக்கும் - வளைக்கும். திருத்தாதை - இந்திரன். அக்கொம்பு - தெய்வயானையம்மையார்.
(3) பசும்பொற்றசும்பு - பசும்பொன்னாலாகிய குடம். கோட்டி - வளைத்து. நாணத்தால் முகங் கோட்டினாள். எய்யாமை நோக்கும் - பிறரறியாதவாறு பார்க்கும்.
முருகக் கடவுள் தெய்வயானையை மணந்தபோது மணப்பந்தரில் அத்தேவியார் அக்கடவுளைக் கடைக்கண்ணால் பிறர் அறியாதவாறு பார்த்தனர்; இங்ஙனம் பார்த்தல் மகளிர் இயல்பு; ஐயனை யகத்துவடி வேயல புறத்தும், கைவளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்” (கம்ப. கோலங்காண். 37.)
|