பக்கம் எண் :

286குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

382.
உண்ணிலா வுவகைத் தடங்கடல் படிந்திட்ட
   உம்பருஞ் செங்களம்பட்
டொண்பருதி யுடல்கிழித் தோடுங் கடற்றானை
   ஒளிறுவா ளவுணர்குழுவும்
தெண்ணிலா மதிநுதற் றெய்வப் பிணாக்கள்வாய்த்
   தேனமுதி மமுதவாரித்
தெள்ளமுது முடனிருந் துண்ணப் பணித்திட்ட
   செங்கைவைவல் பைம்புனத்துப்
பண்ணுலா மழலைப் பசுங்கிளவி யெயினர்பொற்
   பாவைவிழி வேலொடொப்புப்
பார்க்குந் தொறுந்தலை கவிழ்த்துநின் றவடிருப்
   பவளத்து முத்தரும்பும்
தண்ணிலா வுக்கொண் சகோரமென நின்றவன்
   சப்பாணி கொட்டியருளே
தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை
   சப்பாணி கொட்டியருளே.    
(3)

    382. (1-2) முருகக் கடவுள் அசுரர்களோடு போரிடுகையில் இறந்த அசுரர்கள் சூரிய மண்டலத்தை ஊடுருவிச் சென்று வீரசுவர்க்கம் புகுந்து தேவராகித் தேவர் நுகர்பவற்றைத் தாமும் நுகர்வதென்னும் செய்தி இதிற் கூறப்படும்.

    உவகைத் தடங்கடல் படிந்திட்ட உம்பரும் - தம் பகைவராகிய அசுரர்கள் போரில் அழிவது கண்டு இன்பக் கடலில் திளைத்த தேவர்களும். செங்களத்திலே பட்டு; இரத்தத்தாற் சிவந்ததாதலின் செங்களமென்றார்; செங்களம் படக்கொன்றவுணர்த் தேய்த்த ... கழறொடிசை சேஎய்” (குறுந். 1 : 1-3.) போரில் இறந்தோர் சூரிய மண்டல மார்க்கமாக வீரசுவர்க்கம் புகுவர்; (386); “கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்” (கல்லாடம்); “ஏவிய திகிரி வீர்ரைத் துறக்க மேறவிட்டிடுமிரவியைப்போல்” (வி. ப. இராச சூயச். 139.) தெய்வப் பிணாக்கள் - தெய்வ மகளிர்.

    (2-3) செங்கை வேலை. விழிவேலொடு ஒப்பப் பார்க்கும்.

    (3-4) எயினர் பொற் பாவை - வள்ளி. முத்து அரும்பும் தண்ணிலா - புன்முறுவல். அதனை நிலவாக உருவகித்ததற்கேற்ப அதனை விரும்பி நின்ற முருகவேளை நிலாவை உண்ண விரும்பும் சகோரமாக உருவகம் செய்தார்; “குறுமுறுவ னெடுநில வருந்துஞ் சகோரமாய்” (102) என்றார் முன்னும்.