383. | மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின் | | மயிலிளஞ் சாயலுநிலா | | மணிவட மறப்புடைத் திறுமாந்த கனதன | | வனப்புங் குறித்துநோக்கி | | இடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல் | | எனத்திரு வுளங்குழைந்தாங் | | கேந்திளங் கொங்கையை யிணைப்புயத் தேந்திநின் | | றெல்லா வுறுப்புநிற்கக் | | குடமுலைக் கேயிவள்குடிப்பிறப் புக்கியை | | குணங்கிடைத் ததுகொலென்றக் | | கோதைநெடு நாணெய்த வவயவங் கட்குள | | குணாகுணந் தனிதெரிக்கும் | | தடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு | | சப்பாணி கொட்டியருளே. | | தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை | | |
384. | விண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து | | வேந்துபொலி பாந்தள்வைப்பும் | | விரிநீர் வரைப்புமெழில் விஞ்சைய ரிருப்புமுகை | | விண்டுநறை விரிமுண்டகக் |
383. (அடி, 1) சாயல் - மென்மை. இடுகு - சுருங்கிய. இடையாகிய பாவி; பாவியென்றது இரக்கத்தைக் குறிக்க வந்தது. திருவுருவின் மென்மையை முழுதும் நோக்கி அவ்வுருவில் நகில் மாத்திரம் இடைக்குக் கேடு விளைப்பதை நினைந்து அவற்றை ஏந்தினர்.
(3-4) குடிப்பிறப்புக்கு இயை குணம் - கொலை செய்யும் இயல்பு; குறவர் தறுகண்மையோடு மான் முதலியவற்றைக் கொலை புரியும் இயல்புடையார்; இங்கே நகில் இடையை அழிக்கும் வண்ணம் இருத்தலின் இது கூறினார். தனி தெரிக்கும் - தனித்தனியே சுட்டிக்காட்டித் தெரிவிக்கும்.
384. முருகக் கடவுள் தம்மைப் பணியும் அடியார்களுக்கு நாகலோக ஆட்சி முதலிய சிறந்த பதவிகளை அருளுதலும் தாம் குறிஞ்சி நிலத்துக்கு உரிமை பூண்டிருத்தலும் கூறப்படும்.
|