| கண்ணன் றிருப்பதமு நான்முகக் கடவுள்பூங் | | கஞ்சமுங் குலிசப்பிரான் | | கற்பகக் காவுநின் றொண்டர்க டொழும்புக்கொர் | | காணியா வைத்துமற்றத் | | திண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட | | சீறூரு மூரூர்தொறும் | | செந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாம் | | சீதனக் காணிபெற்றத் | | தண்ணெண் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் | | சப்பாணி கொட்டியருளே | | தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை | | |
வேறு 385. | கடலைச் சுவற வடித்து மிடித்துக் | | கனவரை துகள்கண்டும் | | கடிதிற் றரிய வகுப்பதை யொப்பக் | | காரவு ணக்கடலின் | | உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண | | வோங்கலொ டோங்கவமைத் | | தொட்டிய வொட்டல ரிறிப்ற கிட்டவர் | | ஒழியப் பிறரையெலாம் |
(அடி, 1-2) விண் என் - விண் என்னும் ஒலியைச் செய்கின்ற. முடவுப் படம் - முடங்குதலையுடைய படம்; “முடவுப் படப்பாய்ச் சுருட்டு” (3.) வேந்து - ஆதிசேடன். பாந்தள் வைப்பு - நாகலோகம்; இது போகத்தாற் சிறப்புப் பெற்றது. விரிநீர் வரைப்பு - பூவுலகம். விஞ்சையர் இருப்பு - வித்தியாதரருலகம். கண்ணன் திருப்பதம் - திருமால் பதவி. கஞ்சமென்றது பிரமலோகத்தைக் குறித்து நின்றது; “தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே” (தக்க. 240) என்பதையும், ‘முளரி யென்பதனைப் பிரமலோகமெனினும் அமையும்’ என்னும் அதன் உரையையும் காண்க. குலிசப் பிரான் - இந்திரன். தொழும்புக்கு ஓர் காணியா - செய்த தொண்டுக்கு உரிமையாக.
(3-4) சீதனக் காணி - ஸ்திரீ தனமாகிய காணி; மாமனாராற் கொடுப்பக்கடுவது. முருகக் கடவுள் குறிஞ்சிக் கடவுளாதலின் ‘குறிஞ்சித்தலந் தலையளிப்பவன்’ என்றார்.
385. (அடி, 1-2) கனவரை - கிரவுஞ்சமலை. திரிய - மீட்டும் (206.) பிண ஓங்கல் - பிணமாகிய மலை. ஒட்டிய ஒட்டலர் - வஞ்சனம் கூறி எதிர்த்த பகைவர். பிறகிட்டவர் - புறங்காட்டி ஓடியவர்.
|