பக்கம் எண் :

290குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

387.
அற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை
    அங்கைத் தலம்வைத்திட்
டாடு பறந்தலை யோடுதி ரப்புனல்
    ஆறு கடத்துகெனும்
சிற்றல கைக்கொரு பேரல கைப்பெண்
    தேரழி யக்கழியும்
திகிரிப் பரிசில் விடப்படு சுழியிற்
    றெருமரல் மட்பகைஞன்
பற்றிய திரிகை திரித்து விடத்திரி
    பரிசென வுஞ்சுழலும்
பம்பர மெனவும் வரும்படி யவுணர்
    படக்கள வேள்விசெயாக்
கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ
    கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன்
    கொட்டுக சப்பாணி.    
(8)

சந்த விருத்தம்
388.
வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே
    மறிதிரை பொரநிமிர் கருணை கொழித்த பெருக்காறே
அளியுமி னமுதெழு வெளியினில் வைத்த சுவைத்தேனே
    அறமுது தவமொடு வளர வளர்த்திடு நற்றாயே

    387. (அடி, 1) உடற்குறை: எழுவாய். இற்ற - வெட்டப்பெற்ற. தன் தலையையே கையில் வைத்து உடற்குறை ஆடியது.

    (2) அலகை - பேய். தேர்ச்சக்கரத்தையே பரிசிலாக விட்டது. தெருமரல் - சுழலுதல். மட்பகைஞன் - குயவர்.

    (3) திரிகை - சக்கரம். திரி பரிசெனவும் - சுழலும் தன்மையைப் போலவும். அவுணர்பட - அசுர்ர்கள் இறந்துபட. களவேள்வி செய்தல் - பகைவரை வென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு வேட்டல்; இது வாகைத் திணைத்துறைகளுள் ஒன்று (437); புறநானூறு, 26-ஆம் செய்யுளைப் பார்க்க.

    (4) கொற்ற மகள் - வீரத்திரு.

    388. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தனதன தத்த தனத்தானா.

    (அடி, 1) மலைமகள் - உமாதேவியார். பேறு - பயன். மறிதிரை - மடங்கி வருகின்ற அலை.