| களிமயில் கடவிவி ணடையந முடுக்கிய புத்தேளே | | கலைமறை யெனுமுரல் வரியளி மொய்த்த மலர்க்காவே | | தெளிதமிழ் பழகிய மதவலி கொட்டுக சப்பாணி | | தினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி. |
389. | கனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள் | | கணையொடு பிணையென வுலவு கடைக்கண் மடப்பாவாய் | | நனைமலர் பொதுளிய வெழிலி தழைத்த குழற்கொதாய் | | நளிர்புன மிசைவளர் கலபம் விரித்த மயிற்பேடே | | எனவொரு குறமக ளடிமுடி வைத்தனை முத்தேவாம் | | இறைவரு முறைமுறை பணிய விருக்கு முதற்றேவே | | சினவிடை யவர்ருண் மழவிடை கொட்டுக சப்பாணி | | தினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி. |
5. முத்தப் பருவம்
390. | குருகு நாறு செந்தளிர்க்கைக் | | கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக் | | குலப்பூங் கொம்பு நறவூழ்த்த | | கொழுந்தா மரையோ டவிழ்ந்ததுழாய்ச் |
(2) அளியும் - முற்றிய. வெளி - சிதாகாசம். அறம் தவமொடு வளர.
(3) கடவி - செலுத்தி. அடைய - முற்ற. வேதமாகிய வண்டுகள்.
(4) மதவலி - மதவலியென்னும் திருநாமத்தை யுடையாய்; “சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி” (முருகு. 275, ந.)
389. (அடி, 1-3.) இவ்வடிகளில் முருகக் கடவுள் வள்ளி நாயகியைப் பாராட்டுதல் கூறப்படுகின்றது.
(1) தத்தாய் - கிளியே; தத்தை - கிளி, கணை - அம்பு, பிணை - பெண்மான். இரண்டு கண்ணுக்கு உவமை.
(2) நனை -தேன், மலர்பொதுளிய குழலென்க, எழிலி தழைத்த - மேகம்போலவே தழைத்த; எழிலி - மேகம், கலபம்= கபாலம் - மயிலின் தோகை. மயிற்பேடு - பெண் மயில்.
(3) வைத்தனை: முற்று; வைத்து என எச்சமாக்கிப் பொருள் கூறுதலும் உண்டு. இரைவர் - பிரமன் முதலியோர் (364.)
(4) மழவிடை - இளைய காளையை ஒப்பாய்.
390. (அடி,1) குருகு - வளையல், நாறு - தோன்றும். நுசுப்பு - இதை. பூங்கொம்பும் - உமாதேவியாரும், தாமரை நாறும் தலை - பிரமதேவர் தலை.
|