பக்கம் எண் :

292குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சருகு நாறு முடைத்தலையின்
   தாம நாறு திரடிண்டோட்
டாதையாருங் கண்டுகண்டு
   தடங்கண் களிப்பக் குரவுரிந்
தருகு நாறு திருமேனி
   அந்தீங் குதலை மழலைகனிந்
தமுத மூறு பசுந்தேறல்
   அசும்பு நாறத் தெய்வமண
முருகு நாறுஞ் செங்கனிவாய்
   முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
   முருகா முத்தந் தருகவே.    
(1)

391.
நறவு விரிந்த விரைத்தோட்டு
   நளினத் தொட்டிற் றடமுலைப்பால் 
நல்கி வளர்த்த கைத்தாயர்
   நகைவாண் முகத்து மார்பகத்தும்
குறுமெ னடைய சிறுபசுங்காற் 
   குருதி ததும்ப வுதைந்துசில
குறும்பு செயத்தா ணோமெனமென்
   கோல்கொண் டோச்சப் பெரும்புவனம்
நிறுவு மொருநின் பெருந்தன்மை
   நினைந்தாய் போலக் கனிந்தமுது

    (2) துழாய்ச்சருகு நாறு தலை - திருமாலின் தலை; “கருதயன்மால், தருதலையாக வம்மான்” (திருக்குடந்தைத் திரிபந்தாதி.) குரவு - குராமலர்.

    (1-2) கொம்பும் தாதையாரும் களிப்ப.

    (3) மேனி அசும்பு நாற என்ப; அசும்பு - துளி.

    (4) மும்மைத் தமிழ் - முத்தமிழ்; மும்மை - மூன்று; தெரிமாண்டமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்” (குறள், 23, பரி. மேற்.)

    391. (அடி, 1) நளினத் தொட்டில் - சரவணப் பொய்கையிலுள்ள தாமரைப் பூவாகிய தொட்டில்; “பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்” (பரி. 5 : 49); ”சரவணப் பூந்தொட்டிலேறி” (கந்தரலங்காரம், 5.) கைத்தாயர் - கார்த்திகைப் பெண்கள்.

    (1-2) முகத்தும் மார்பகத்தும் உதைந்து. குறும்பு - விளையாட்டு. ஓச்ச -அடித்தற்கு ஓங்க.