பக்கம் எண் :

294குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும்
    தண்டே னறையும் வடித்தெடுத்த
சாரங் கனிந்தூற் றிருந்தபசுந்
    தமிழு நாறத் தடங்கரைகொல்
அலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும்
    அகிலாண் டமும்பன் முறையீன்றும்
அழகு முதிர முதிராவென்
    அம்மை யமுது சூற்கொண்ட
முலைப்பா னாறுஞ் செங்கனிவாய்
    முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
    முருகா முத்தந் தருகவே.    
(4)

394.
புயலுண் டிருண்ட கொந்தளமும்
    பொன்னங் குழையு மின்னகையும்
புளகம் பொதிந்த விளமுலையும்
    புருவச் சிலையும் போர்த்தடங்கட்
கயலுங் கலப மயிலியலும்
    கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின்
காமர் நலனும் பன்னிரண்டு
    கண்ணான் முகந்துண் டின்னமுதின்

    (1-2) முருகக் கடவுள் முதற்சங்கத்திலிருந்து தமிழாராய்ந்தவரென்பது கருதி இது கூறினார் (375.) பாவலர் தமிழும், மறையும் தமிழும் நாற.

    (3) தெண்கடல் வைப்பு - பூமி.

    (3-4) முதிரா முலை.

    394 (அடி, 1) கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின் (அடி, 2) கொந்தள முதலியன வென்று கூட்டி யுரைக்க. கொந்தளம் - கூந்தல்; இது குந்தளமெனவும் வழங்கும்.

    (2) பெண்ணமுது - வள்ளிநாச்சியார்.

    (1-2) பன்னிரண்டு திருவிழிகளுக் கேற்பக் கூந்தல், இரண்டு குழைகள், நகை, இரண்டு நகில்கள், இரண்டு புருவங்கள், இரண்டு கண்கள், மென்மை, அழகென்னும் பன்னிரண்டும் கூறப்பட்டன.