பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்295

இயலுஞ் சுவைநல் லவியொடுநீத்
    தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின்
இழுமென் குதலை கனிந்தூறும்
    இதழ்ந்தேன் சுவைகண் டேமாப்பான்
முயலுங் குமுதக் கனிவாயால்
    முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
    முருகா முத்தந் தருகவே.    
(5)

வேறு
395.
கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளித்திட்ட
    கொடியிடைக் கடைசியர்குழாம்
குரவையிடு துழனியிற் கொண்டறிரை யத்ததாவு
    குழவுப் பகட்டுவாளை
சேடுபடு புத்தே ணிலத்துப் புனிற்றிளஞ்
   சேதா வயிற்றுமுட்டச்
சேங்கன் றெனத்தவு மடிமடை திறந்தூற்று
    தீம்பால் சினைக்கற்பகத்
தேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந்
    தேரியொடு கானிரம்ப
இழிதுபடு கழனியுந் நெய்வமண நாறவேன்
    றின்சுவை முதிர்ந்துவிளையும்
காடுபடு செந்நெல்பைங் கன்னனிகர் புள்ளூர
    கனிவாயின் முத்த மருளே
கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன்
    கனிவாயின் முத்தமருளே.    
(6)

    (3) அவி - தேவருணவு. ஏக்கற்று - ஆசையால் தாழ்ந்து. ஏமாப்பான் - இன்பமடையும் பொருட்டு.

    395. (அடி, 1) கோடு - யானைக்கொம்பு. குரவை - குரவைப்பாட்டு; இது குலவையென வழங்கும். துழனி - ஆரவாரம். திரைய - சுருள.

    (2) சேதா - காமதேனு. சேங்கன்று - காளைக்கன்று. தட என்றது தடவு என நின்றது; தட - பெருமை.

    (3) கால் - வாய்க்கால். இழுதுபடு - சேறாகின்ற. கழனி - வயல்.

    (4) கன்னல் - கரும்பு.