பக்கம் எண் :

296குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

396.
துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும்
    துகிற்கொடிகள் சோலைசெய்யத்
தோரண முகப்பிற் றவழ்ந்தேறு கலைமதித்
    தோற்றத்தை யறுகான்தடுத்
தளிதூங்கு தேனிறா லிதுதம்மின் வம்மினென்
    றழிநறா வார்ந்துநிற்கும்
அந்நலார் கைகூப்ப வாடவர் பிழிந்தூற்று
    மளவிலப ராதமிதெனா
ஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேனிவிடுதிர்
    உயிரொன்று மெனவிடலுமவ்
வுடுபதிக் கடவுணற வுண்டமற் றவரினும்
    உய்ந்தோ மொழிந்தோமெனாக்
களிதூங்கு மாடமலி கந்தபுரி வருமுருக
    கனிவாயின் முத்தமருளே
கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன்
    கனிவாயின் முத்தமருளே.    
(7)

397.
பூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி     
    பூந்துகட் படலமுமணம்
பொங்கிய நறும்புகைப் படலமுங் காலமழை
    பொழிமுகிற் படலஞ்செயத்

    396. கள்ளைக் குடித்த மகளிர் மயக்கத்தாற் சந்திரனைத் தேனிறாலென்று கருதி விரும்ப, ஆடவர் அச்சந்திரனைப் பிடித்துப் பிழியத் தொடங்குகையில், சந்திரன் தனக்குரிய தண்டனை போலும் இதுவெனக் கருதி, “நான் மகளிர் முகத்திற்கு ஒப்பென்று சொல்லவில்லையே” என்று சொல்லி விடுபட்டுச் சென்ற மகிழ்வானென்று கற்பனை இதிற் கூறப்படும்.

    (அடி, 1) துகிற்கொடி - துவசம். தோரணமுகப்பு - வாயில் மாடம். அறுகால் - வண்டு. மதியின் களங்கத்தை வண்டென்று கொள்க.

    (2) அளி - அளிதல்; முதிர்தல். சந்திரனுக்குத் தேனிறால் உவமை; “வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத், தேனினிறாலென வேணியிழைத்திருக்கும்” (கலி. 39.)

    (3) உடுபதிக்கடவுள் - சந்திரன். அவரினும் - அவரிடத்தினின்றும், உய்ந்தோமொழிந்தோம் - பிழைத்தோம்; ஒரு சொன்னீர்மையன.

    397. (அடி, 1) மரு - நறுமணம். பூந்துகட்படலம் - மகரந்தப் பொடியின் பரப்பு. புகை கூந்தலுக்கு ஊட்டியது. முகிற்படலஞ் செய - மேகபடலத்தின் தோற்றத்தை உண்டாக்க.