பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்297

தாமரை முகச்சோதி யெழவெழுச் சிறுமுறுவல்
    தண்ணிலவு செயவெயில்செயத்
தழன்மணிக் கலனக னிதம்பமொடு வெம்முலை
    தடங்கடலு மலையுஞ்செயத்
தேமரு குழற்கோதை மயிலனீர் கோசிகச்
    செம்மலென வேறுபுவனம்
செயவும்வல் லீரென மணந்திடை தணந்தவர்சொல்
    செஞ்சாற் பசுங்கிளிசொலக்
காமரு மணங்குழையு மாதர்பயில் வேளூர
    கனிவாயின் முத்தமருளே
கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகள்
    கனிவாயின் முத்தமருளே.    
(8)

சந்த விருத்தம்
398.
மதியு நதியு மரவும் விரவு
   மவுலி யொருவன் முக்கணும்
வனச முகமு மகமு மலர
   மழலை யொழுகு சொற்சொலும்
புதல்வ விமய முதல்வி யருள்செய்
   புனித வமரர் கொற்றவன்
புதல்வி தழுவு கொழுந குறவர்
   சிறுமி குடிகொள் பொற்புய

    (2) தழல் மணிக்கலன் வெயில்செய.

    (3) கோசிகச் செம்மல் - விசுவாமித்திரர். மகளிரிடத்தே உள்ள மகரந்தப்பொடி முதலியவை புதிதாகப் படைத உலகமொன்றிலுள்ள மேகம் முதலிய பொருள்களைப் போலத் தோற்றினமையின் விசுவாமித்திரரை அம்மகளிருக்கு உவமித்தனர். என - என்று பொய்பாராட்டி. தணந்தவர் - பிரிந்தவர்.

    (3-4) பிரிவதற்கு முன் கணவர் தனிமையிற் கூறிய பாராட்டுச் சொற்களை அங்கிருந்த கிளி கற்று அவர் பிரிவாற்றாமையால் வருந்துங் காலத்துச் சொல்ல அவற்றைக் கேட்டு மகளிர் வருந்தினர். இத்தகைய நிகழ்ச்சியை “உள்ள மொன்று” (நைடதம், நகரப். 35) என்னும் செய்யுளால் உணரலாகும்.

    398. (சந்தக் குழிப்பு.) தனன தனன தனன தனன தனன தனன தத்தன.