| கதிரு மதியு மொளிர வொளிரும் | | ஒளிய வளிய கற்பகக் | | கனியி னினிய வுருவ பருவ | | மழையி னுதவு கைத்தல | | முதிரு மறிவி லறிஞ ருணரு | | முதல்வ தருக முத்தமே | | முனிவர் பரவு பருதி புரியின் | | |
399. | வடிவி னழகு மெழுத வரிய | | புயமு நறிய செச்சையும் | | மருமம் விரவு குரவு மரையின் | | மணியு மணிகொள் கச்சையும் | | கடவு மயிலு மயிலு மொழுகு | | கருணை வதன பற்பமும் | | கமல விழியும் விழியு மனமும் | | எழுதி யெழுதி நித்தலும் | | அடிக ளெனவு னடிகள் பணியும் | | அடிய ரலது மற்றும்வே | | றமரர் குழுவு மகில மறையும் | | அரியு மயனு முற்றுநின் | | முடியு மடியு முணர வரிய | | முதல்வ தருக முத்தமே | | முனிவர் பரவு மருதி புரியின் | | |
(3) ஒளிய - ஒளியை யுடையாய். அளிய - அளிதலையுடைய. கற்பகக் கனியினில் இனிய உருவ: 366-ஆம் செய்யுளின் குறிப்பைப் பார்க்க.
(4) அறிஞர் அறிவில் உணருமென்க.
399. (அடி, 1) செச்சை - வெட்சிமலர். மருமம் - மார்பு. குரவு - குரா மலர். அரையின் மணி - உடைமணி.
(2) கடவும் - செலுத்தும். மயிலும் அயிலும்; அயில் - வேல். விழியிலும் மனத்திலும் எழுதி எழுதி.
(3) அடிகள் - ஸ்வாமி.
(3-4) அடியரலது ஏனையோரால் அறிதற்கரிய முதல்வ.
|