பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்299

6. வருகைப் பருவம்

400.
செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
திருவரையி லரைமணி கிணின்கிணி னெனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப
அம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும்
    ஆரமுந் நிருவில்வீச
அணிமகர குண்டலம் பருதிமண் டலமென்ன
    அலர்கதிர்க் கற்றைசுற்றப்
பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
    பட்டமொளி விட்டெறிப்பப்
பங்கய மலர்ந்ததிரு முகமண் தலந்தொறும்
    பனிமுறுவ னிலவரும்பக்
கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக்
    குமாரநா யகன்வருகவே
குரவுகமழ் தருகந்த பொரியிலருள் குடிகொண்ட
    குமரகுரு பரன் வருகவே.    
(1)

401.
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில்
    மடித்தல நனைப்பவம்மை
மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான்
    மார்பினிற் குரவையாடி

    400. (அடி, 1) அரிக்குரல் - தவளையின் குரலைப்போன்ற குரல். கலிப்ப - முழங்க.

    (2) பகடு - பெருமை. சன்னவீரம் - வீரசங்கிலி (தக்க. 341.) திருவில் - இந்திரவில்லின் ஒளி.

    (3) பட்டம் - நெற்றிப்பட்டம்.

    (4) முருகக் கடவுளுக்கு விருப்பமுடையதாதலின் குரவு கமழ்தரு கந்தபுரி யென்றார்; குரா - ஒரு மரம்.

    (முடிபு.) கலின்கலினென என்பது முதலிய எச்சங்கள் வருக வென்பதனோடு முடிந்தன.

    401. முருகக் கடவுள் சிவபெருமான் திருமேனியின்மீது இவர்ந்து அங்குள்ள பொருள்களோடு சிறுவிளையாடல்கள் செய்வது கூறப்படும்.

    (அடி, 1) மழவு - இளமை. வாய்த்தேறல் :14. தேறல் - தேன்; குரவை - ஒருவகைக் கூத்து.