| முழவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் | | மோலிநீர் பெய்தவித்து | | முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின் | | முதுபசிக் கறுகருத்தி | | விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ | | மிகப்புழுதி யாட்டயர்ந்து | | லிரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு | | வெள்ளநீர்த் துளையமாடிக் | | குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு | | குறும்புசெய் தவன்வருகவே | | குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட | | |
402. | இருளற விமைக்குநின் றிருவுருவி னலர்சோதி | | இளஞாயி றெனமுகையவிழ்ந் | | தேடுவிரி தாமரைக் காடுமுகிழ் நகைநில | | வெறிப்பவலர் குமுதவனமும் | | கரைபுரள வலைமோது எடலைக் கலக்குமழ | | களிறென வுழக்கியோருநின் | | கண்மலர்கள் செம்மலர்க ளாகமோ கப்பெருங் | | கலவியங் கடலின்மூழ்கும் |
(2) முழவு முதிர் - முழவினைப் போன்ற ஓசை முதிர்கின்ற; முழவு - மத்தளம். துடி - உடுக்கை; இறைவன் திருக்கரத்திலுள்ளது. குழவுப் பருவத்திற்கேற்பச் சிறுபறை கூறப்பட்டது. கனல் - திருக்கரத்திலுள்ள அக்கினியை. மோலிநீர் பெய்து - கங்கைநீரைப்பெய்து. மடுத்து - செறித்து. அறுகம்புல் சிரத்திலுள்ளது.
(3) புழுதியாட்டயர்தல் : 2. துளையமாடுதல் - துளைந்து விளையாடுதல்; வழக்கு. விழிகள் சேப்ப: “நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்” (குறுந். 355.)
(4) சிறு குறும்பு - சிறுவிளையாட்டு.
402. முருகக் கடவுள் நவ்வீரர்களோடு சரவணப் பொய்கையில் விளையாடுதல் கூறப்படும்.
(அடி, 1) சரவணப் பொய்கையிலுள்ள தாமரைமலர் முருகக் கடவுளது திருமேனிச் சோதியைக் கண்டு மலர்ந்தது. முருகக் கடவுளது திருமேனியின் ஒளிக்கு ஞாயிறு உவமை (360.) நகையில் உண்டாகிய நிலவைப் போன்ற ஒளியினால் குமுதம் மலர்ந்தது.
(1-2) காட்டையும் வனத்தையும் உழக்கி; உழக்கி - கலக்கி.
|