| வெருளின்மட நீக்கினீ ர்ரமகளி ருடனாடும் | | விளையாட் டெனத்திரைபொரும் | | வெள்ளநீர்ச் சரவணப் பொய்கையந் துறையினீள் | | வீரர்க ளெனுங்கோளரிக் | | குருளைக ளொடும்புனல் குடைந்துவிளை யாடிய | | குமாரநா யகன்வருகவே | | குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட | | |
403. | கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த | | கலைமதியொ டையநீயக் | | கவுரிதிரு முடியினித் திலமிட் டிழைத்திட்ட | | கதிரிளம் பிறையிணைப்பத் | | தெட்டுண்ட போன்முழுத் திங்களென் றேக்கறுஞ் | | செழுமணிச் சூட்டுமோட்டுச் | | செம்பாம்பு பைவிரித் தாடுதலு மோடிநின் | | சிறுநறுய் குஞ்சிக்கிடும் |
(3) நீரரமகளிர் - நீர்நிலைகளில் உறையும் தெய்வ மகளிர். வீரர்கள் - வீரவாகு முதலிய ஒன்பது வீரர்கள்.
(3-4) கோளரிக் குருளைகள் - சிங்கக் குட்டிகள்.
403. முருகக் கடவுள் சிவபெருமான் திருமுடியிலுள்ள பிறையோடு அம்பிகையின் திருமுடியிலுள்ள முத்தாலாகிய பிறையென்னும் ஆபரணத்தை இணைத்தபோது அவற்றை முழுமதியென்று எண்ணிச் சடையிலுள்ள பாம்பு அதனைப் பிடித்தற்கு வருகையில் அப் பாம்பைத் தம் திருமுடியில் புனைவதற்குரிய காந்தளென்று நினைந்து முருகக் கடவுள் அதனருகே செல்ல, அப் பாம்பு ஓடியது. அப்போது சிவபெருமான் திருமுடியிலிருக்கும் பிரமதேவருடைய நகுதலை தம்மைக் கண்டு சிரிப்பதாக எணி, “நீ முன்னரே குட்டுண்டதை மறந்தனையோ?” என்று கூறி முருகக் கடவுள் சினந்தார்.
(அடி, 1) பிறை - பிறையென்னும் ஆபரணம் (528); “செந்திருவுந் திங்களும் பூவுந் தலைசிறப்ப” (தண்டி, 31, மேற்.)
(2) தெட்டுண்டபோல் - ஏமாற்றப் பட்டதுபோல். ஏக்கறும் - இடு பெற்றிலேமே யென்று வருந்தும்.
|