| மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம் | | மாசுணம் வெருண்டோடலும் | | மணிமுடியி னகுதலையை மற்றெமை நகைத்தியால் | | மலரவன் றலைநீமுனம் | | குட்டுண்ட தறியாய்கொ லெனவித ழதுக்கும் | | குமாரநா யகன்வருகவே. | | குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட | | |
404. | அங்கைத் தலத்தம்மை செங்கண் புதைததற் | | கடங்காமை யாலெம்பிரான் | | அலர்விழிகள் பொத்தலு மிருட்படல மூடவுள் | | ளஞ்சிநின் றேங்கவேங்கிச | | செங்கைத் தலங்கொண் டெடுத்தணைப் பாட்கும் | | திருத்தாதை யார்க்குமுத்தம் | | திருமுகமொ ராறுங் கொடுப்பக் கதுப்பிற் | | றெறித்துமுத் தந்தருகெனும் | | கங்கைக்கு நல்கா தெழுந்தலறி யோடலும் | | கண்ணீர் துடைத்தெடுத்துக் | | கான்மலரு நீவித்தன் மார்புற வணைக்குமக் | | கவுமாரி யருண்மாரியிற் |
(3) மட்டு - நறுமணம். நகுதலை - சிவபெருமான் திருச்சடையில் அணிந்திருப்பது.
(4) இதழ் அதுக்கும் - உதட்டைக் கடிக்கும். இது சினக் குறிப்பு.
404. முருகக் கடவுள் உமாதேவியாருடைய திருவிழிகள்ப் பொத்த முடியாமையின் சிவபிபரான் திருவிழிகளைக் கைகொண்டு மூடவும் இருள் எங்கும் மூடியது; அது கண்டு முருகக் கடவுள் ஏங்கி நிற்ப அவரை அம்பிகை எடுத்தணைக்க முருகவேள் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் முத்தங் கொடுத்தனர்; கங்காதேவி தனக்கும் முத்தங் கொடுக்க வேண்டுமென்று விரும்பவும் அத்தேவிக்குக் கொடாமல் அழுது ஓட அம்பிகை அவரை எடுத்துச் சீராட்டினளென்ற செய்தி இதிற் கூறப்படும்.
(அடி, 1) அம்மையது கண் கைக்கடங்காது அகன்றதாதலின் புதைத்தற்கு அடங்காததாயிற்று. இருட்படலம் - இருட்பரப்பு.
(2) சிவபிரானுடைய முகமைந்து, உமாதேவியாருடைய முகம் ஒன்று ஆக ஆறிலும் ஆறுமுகத்தாலும் முத்தம் கொடுத்தனர். கதுப்பில் தெறித்து - கன்னத்தில் விரலால் சுண்டி.
(3-4) அருள்மாரியைப் போலக் கொட்டு பாலருவி.
|