பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்303

கொங்கை குடங்கொட்டு பாலருவி யாடும் 
    குமாரநா யகன்வருகவே 
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட 
    குமரகுரு பரன் வருகவே.    
(5)

வேறு
405.
பைந்தண் கமல வட்டவணைப்
    பாவை யனையார் பூவிரியும்
பசுமென் குழற்கூட் டகிற்புகையின்
    படல மூட முடைநறவின்
கந்தம் பொதிந்த செந்துவர்வாய்க்
    கடைசி மகளிர் செந்நெலைப்பைங்
கன்ன லெனவுங் கன்னலைப்பூங்
    கமுக மெனவுங் கடைக்கூடாத்
தந்தங் கருத்துக் கமைந்தபடி
    சாற்றிச் சாற்றி முழுமாயச்
சலதி மூழ்கித் தடுமாறும்
    சமயத் தவர்போற் றலைமயங்கும்
அந்தண் பழனக் கந்தபுரிக்
    கரசே வருக வருகவே
அருளா னந்தக் கடற்பிறந்த
    அமுதே வருக வருகவே.    
(6)

    405. (அடி, 1) கமல வட்ட அணை - தாமரை மலராகிய வட்ட மெத்தை (34.) குழலுக்கு ஊட்டுகின்ற.

    (1-2) முடை நறவின் கந்தம் - மாமிசம் கள் இவற்றின் நாற்றம். கன்னல் -கரும்பு. செந்நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகெனவும் எண்ணியது புகை மூடியிருத்தலின் (375.) கடைக்கூடா - முடிவுபெறாத.

    (3) சலதி - கடல். சமயத்தவர் - சமயவாதிகள்.

    (4) அருளானந்தக்கடல் - சிவபெருமான் (410.)