406. | வள்ளைக் குழையிற் றாவடிபோம் |
| மடமா னோக்கிற் கடைசியர்கண் |
| மாலைக் குழல்வண் டோலமிட |
| மடுவில் வெடிபோம் வரிவாளை |
| பள்ளத் திருடூங் கழுவநீர்ப் |
| பரப்பென் றகல்வான் மிசைத்தாவப் |
| பாகீ ரதித்தீம் புனல்கிடைத்த |
| பரிசு வீட்டின் பயன்றுய்க்கும் |
| உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை |
| உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம் |
| உணர்விற் றெய்வங் கடைக்கூட்ட |
| உறுதி கிடைத்த படிபோலும் |
| அள்ளற் பழனப் புள்ளூருக் |
| கரசே வருக வருகவே |
| அருளா னந்தக் கடற்பிறந்த |
| |
(2) அழுவம் நீர்ப்பரப்பு - கடற்பரப்பு. பாகீரதி - ஆகாய கங்கை. பரிசு - இயல்பு; எழுவாய். (3) பிறிது ஒன்றை - உண்மைப் பொருளல்லாத ஒன்றை. உணர்வில் - அறிவில். உறுதி - வீடு.
(1-3) கடைசியரது கூந்தலில் ஒலிக்கும் வண்டின் ஒலிக்கு அஞ்சிய வாளைமீன் ஆகாயத்தைக் கடலென மயங்கி அதனிடத்தே தாவ, அது தான் நினையாமலே ஆகாய கங்கையில் வீழ்ந்து மகிழ்ந்தது; இந் நிகழ்ச்சி பிறிதொரு தெய்வத்தை மெய்யாக் கொண்டு அன்பு செய்பவர்களுக்கும் இறைவன் நல்லருள் செய்ய உறுதிப் பயன் கிடைத்தது போன்றது.
(4) அள்ளல் - சேறு.