பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்305

சந்தவிருத்தம்
408.
உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே
   உருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமே
கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே
   கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
அலகில் புவம முடியும் வெளியி லளியு மொளியி னிலயமே
   அறிவு ளறிவை யறியு மவரு மறிய வரியபிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே
   வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே.        
(9)
    
407. காமன் படையாகிய மகளிர் நிரம்பி யிருத்தலின் காமனுக்கு உரிய படைவீடென்னும் பொருளும் வேளூர் என்பதற்கு அமையுமென்பது இதிற் கூறப்படும்.

    (அடி, 1) மகளிர் உறுப்புக்களிற் சிலவற்றைப் படைக்கலங்களாகவும் சிலவற்றைத் தேர் முதலிய படைகளாகவும் உருவகம் செய்கின்றார்; 120. நாமம் - அச்சம்.

    (2) களிறு : நகில்.

    (3) கை - படையின் பக்கம்; படைவகுப்புமாம். அப்பெயரென்றது வேளூரென்பதைச் சுட்டியது.

    408. (சந்தக் குழிப்பு.) தனன தனன தனன தனன தனன தனன தனதனா.

    (அடி, 1) உணர்வு - அறிவு. உதயம் - சூரியோதயம்.