| செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர் | | செஞ்சடைக் கருமிடற்றுத் | | தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலைத் | | |
10. | வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை | | விரும்புஞ் சுரும்பர்பாட | | விளைநறவு கக்கும் பொலம்பொகுட் டலர்கமல | | வீட்டுக் கொழித்தெடுத்துத் | | தெள்ளித் தெளிக்குந் தமிழ்க்கடலி னன்பினைந் | | திணையென வெடுத்தவிறைநூற் | | றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதி மத்தினிரு | | சீறடி முடிப்பம்வளர்பைங் | | கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை யொழுகுதீங் | | கிளவியுங் களிமயிற்குக் | | கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி | | கிஞ்சுகக் சூட்டரசனப் | | பிள்ளைக்கு மடநடையு முடனாடு மகளிர்க்கொர் | | பேதைமையு முதவிமுதிராப் | | பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொருபாண்டிப் | | பிராட்டியைக் காக்கவென்றே. |
(4) செஞ்சூட்டு - சிவந்த உச்சிக்கொண்டை; ஓதிம மென்றதற்கேற்ப இது கூறப்பட்டது. தடாதகைப்பிராட்டியார் திக்குவிசயம் செய்தபொழுது கைலைக்கும் சென்று சிவபெருமான் முன் நின்றதை யெண்ணி, ‘தேவுக்கு முன்னின்ற தெய்வம்’ என்றார்.
10. (அடி, 1) வெள்ளித்தகட்டைப் போன்ற நெடிய இதழ்களை; என்றது வெண்டாமரையின் இதழ்களை. அவிழ்த்து - மலர்த்தி. கக்கும் - சொரியும்.
(2) தெள்ளித் தெளிக்கும்: 702. அன்பினைந்திணையென எடுத்த இறைநூல் - அன்பினைந்திணை யென்னுந் தொடக்கத்தையுடைய இறையனாரகப் பொருளென்னும் இலக்கணம். நூலாகிய அமுது; “அன்பினைந் திணையென் றறுபது சூத்திரம், கடலமுதெடுத்துக் கரையில்வைத்ததுபோற், பரப்பின் றமிழ்ச்சுவை திரட்டிமற் றவர்க்குத், தெரிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள்” (கல்.) கமலவீட்டின் கண் அமுதத்தைக் கூட்டுணுமென்க. வெள்ளோதிமம் - கலைமகள். கலைமகளுக்கு வெள்ளை யன்னம் உவமை: 324, 706.
(3) கிள்ளைக்குக் கிளவி கற்பித்தல்: 663. நவ்வி - மான். கிஞ்சுகச் சூட்டு - முருக்கம் பூவைப்போன்ற உச்சிக்கொண்டையையுடைய.
(4) பிள்ளைமை - இளமைப்பருவம்.
|