பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்307

409.
இழுமெனருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே
    இயலு நடையும் வடிவு மழகு மெழுத வரியன் வருகவே
ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே
    ஒருவ னிருவ ரொடுகை தொழுந லுபய சரணன் வருகவே
விழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே
    விளரி பயிலு மளியு ஞிமிறும் விரவு குரவன் வருகவே
மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே
    வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே.    
(10)
 
ஆசிரிய விருத்தம்

 
410.
மண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு
        மதிக்கடவு ளெனவருதலால்
      வானாறு தலைமடுக் கப்பொங்கு மானந்த
தண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத்
    தாமரை முகிழ்த்திடுதலாற்
சகலபுவ னத்திலு முயிர்ப்பயிர் தழைப்பயநற்
    றண்ணளி சுரந்திடுதலால்
துண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ்
    சோதிகட் பொறியாதலால்
தோன்றலிவ னின்னையொத் துளனா னினக்குமொரு
    துணையிவன் போலில்லைகாண்
அண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ
    டம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(1)

411.
சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந்
    தோகைமேல் கொண்டருளினாய்  
தோற்றிமுன் பொங்கிமலை போலவலை மோதுமச்  
    சோதிவே லையுமுகந்தாய்  

கங்கை. தலைமடுக்க - சேர. சிரத்திலே சேர்த்த. பொங்கு மானந்த மாக்கடல் -மேலெழும் முழங்குகின்ற சங்குகளையுடைய பெரிய கடல்; பொங்கிய ஆனந்தமாகிய பெரிய கடல்போன்ற சிவபெருமான் (405). ஆல் - முழக்கம்; நந்த - சங்குகளையுடைய.

    (2) கொடிச்சி வாய்க்குமுதம் விள்ள - கொடியின்கண் உள்ள குமுத மலர் மலர; கொடிச்சி - கொடி; கொறுக்கை, கொறுக்கைச்சியென நின்றது போன்றது; குறமகளாகிய வள்ளி நாயகியாரது திருவாய் மலரும்படியென்பது இரண்டாவது பொருள். கரத்தாமரை முகிழ்த்திருதலால் - ஒளியையுடைய தாமரை மலர் குவிதலால்; கரம் - ஒளி; திருக்கரமாகிய தாமரை அஞ்சலி செய்வதாலென்பது இரண்டாவது பொருள். உயிர்ப் பயிர் - உயிரையுடைய பயிர்கள், ஆன்மாக்களாகிய பயிர்கள். சந்திரனால் பயிர்கள் தழைத்தலின் அவனைய் சசியாதிபதியென்பர்.

    (3) சோதி - சிவபெருமான். கட்பொறி - கண்ணாகிய இந்திரியம். கண்ணிலிண்டாகிய தீப்பொறிகள்.

    (4) அண்டரண்டம் - தேவருலகம்.

    411. (அடி, 1) சொல் தரு பெரும்புலவர் - புகழைப் பெற்ற பெரிய தேவர், சொல்லைத் தருகின்ற பெரிய புலவர்கள். கலையமுதுகொள விருந்தோகைமேல் கொண்டருளல் - கிரணமாகிய அமுதத்தை விருந்தாகக் கொள்ள மகிழ்ச்சியைக் கொள்ளல், சாத்திரங்களாகிய அமுதத்தைக் கொள்ளக் கரிய மயிலின்மேல் எழுந்தருளி யிருத்தல்; “அமர ருண்டி”