| குற்றமில் குணத்தைக் குறித்தவிர வலர்முகம் | | கோடா தளித்தல்செய்தாய் | | கோகனக நாயகன் வரக்கூ விடுங்குக் | | குடங்கொடிய தாகவைத்தாய் | | உற்றிடு மிதழ்க்குமுதம் விண்டுதண் டேனொழுக | | ஒளிநிலா நகைமுகிழ்த்தாய் | | உன்செய்கை யெம்பிரான் றன்செய்கை போலுமால் | | உனையுமிவ னொவ்வாதிரான் | | அற்பொதி களத்தவ னளித்தகும ரேசனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
412. | கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் | | கண்ணினுண் மணியிவன்காண் | | கலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண் | | கலைமுழுது நிறையநின்றான் |
(பரிபாடல், 11 : 35) என்று சந்திரன் கூறப்படுதல் காண்க. மலைபோல அலைமோதுமச் சோதிவேலையும் உகந்தாய் - மலையைப் போலப் பெரிய அலைகளை மோதும் அந்த ஒளியையுடைய கடலையும் விரும்பினாய்; முருகக் கடவுளுக்கு, மலையையும் அதனைப்போலக் கடலையும் ஊடுருவிய ஒளியையுடைய வேற்படையை விரும்பிய செயலைக் கொள்க.
(2) இரவலர் முகங் கோடாது - இரவிலே மலரும் மலர்கள வாடாமல், யாசகர்களுடைய முகம் கோணாமல். கோகனக நாயகன் - சூரியன். குக்குடம் - கோழி. கொடியதாக - கொடுமையை யுடையதாக; பகைப் பொரொளாக வென்றபடி. துவசமாக வென்பது முருகக் கடவுளுக் கேற்பக் கொள்ளும் பொருள்.
(3) குமுதம் விண்டு தண்டேன் ஒழுக - குமுதமலர் மலர அதிலிருந்து தண்ணிய தேன் ஒழுக, வாயிலிருந்து நீர் ஊற. நிலா நகை - நிலாவாகிய ஒளி, நிலாவைப் போன்ற நகை.
(4) அல் - இருட்டு; இங்கே கருமை.
412. இதுமுதல் இரண்டு பாடல்களிற் பேதம் கூறப்படும்.
(அடி, 1) அடிகள் - சிவபெருமான். கலைகள் - கிரணங்கள். கலைமுழுதும் - சாத்திரங்கள் முழுவதும்.
|