| எங்குமிர வோவெனத் திரிதியிவ னடியவர் | | எவர்க்குமிர வினையொழித்தான் | | இருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன் | | எவ்வுயிரும் வாழச்செய்தான் | | பொங்ககுமுத மமுதா சனர்க்குதவி னாயிவன் | | புத்திமுத் தியுமளித்தான் | | புவனம் படைத்தவிவ னின்னின்மிக் கானெனப் | | புகல்வதோர் பொருளன்றுகாண் | | அங்கண்மறை யோலிட் டரற்றிநின் றவனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
413. | பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் | | படலங் கிழிப்பதுணராய் | | பனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப் | | பரப்பெலாம் பொலிவதோராய் | | சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத் | | திருமலர் திறக்கவறியாய் | | சிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும் | | திளைத்தின்ப மாரச்செயாய் |
(2) இரவோன் - இராத்திரிக்குரியவன்; யாசகஞ் செய்பவனென்பது வேறு பொருள். அங்குரிக்கும் - முளைக்கும். சந்திரன் ஓரறிவுயிர்கள் வாழச் செய்தலும் முருகக் கடவுள் எல்லாவுயிர்களும் வாழச் செய்தலும் இங்கே வேற்றுமை.
(3) அமுதாசனர் = அமுத அசனர் - அமுதத்தை உணவாகவுடைய தேவர்கள்; முன்னரே அமுதத்தை உண்டவர்களுக்கு நீ அமுதமுதவினா யென்பதுபட நின்றது. புத்தி முத்தி - போகமும் மோக்ஷமும்.
(4) ஓலிட்டு - ஓலமிட்டு; முழங்கி.
413. (அடி, 1) இருட் போதத்து - இராப்போதில். அகவிருட்படலம் - அகவிருளாகிய அஞ்ஞானத்தின் பரப்பு.
(2) உளத்திருமலர் - இதயமாகிய தாமரை. சகோரப்புள் நிலவை யுண்ணுதல்: 102, 382.
|