| நீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில் | | நின்பெருந் தவமென்சொல்கேன் | | நெடியவன் முதற்றேவர் குறுகிநிற் பவுமுனை | | நினைத்தழைத் தருளினன்காண் | | ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனொ | | டம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
414. | தருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத் | | தலைத்தலை மயங்கத்தொகும் | | சன்னிதி யடைந்தவர்கள் பையுணோய் முற்றும் | | தவிர்ந்தக மகிழ்ந்துதவிராக் | | கருமன்னு மூழிப் பெரும்பிணியு மாற்றிடுதல் | | கண்டனை யிருத்தியானின் | | கயரோக முடன்முயற் கறையுந் துடைத்திடக் | | கருதிடுதி யேலெம்பிரான் | | திருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத் | | திருச்சாந்து நிற்கவற்றாச் | | சித்தாமிர் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந் | | திவலையொன் றேயமையுமால் |
(1-2) சந்திரன்பால் இல்லாதனவாகக் கூறப்பட்ட இயல்புகளும் செயல்களும் முருகக் கடவுள்பால் உள்ளவை.
(3) குறுகி - தன்னை அடைந்து. நெடியவன் குறுகி நிற்பவென்றது முரண்.
414. இது முதல் இரண்டு செய்யுட்களில் தானம் கூறப்படும்.
(அடி, 1) தரு - கற்பக விருட்சம். பொன்னுலகு - தேவலோகம். பையுள் நோய் - துன்பத்தைத் தரும் நோய்.
(2) கரு மன்னு ஊழிப் பெரும் பிணி - கருப்பையில் தங்குவதாகிய நெடுங்காலமாக வரும் பிறவி நோய். கயரோகம் - நாளுக்கு நாள் குறைதலாகிய நோய். முயற்கறை - முயலாகிய களங்கம்.
(3) வெண் சாந்து - விபூதி; இது திருக்கோயிலிலுள்ள விபூதிக் குண்டத்திலிருந்து எடுப்பது. மற்றைத் திருச்சாந்தென்றது அங்க சந்தானத் தீர்த்ததினின்றெடுக்கும் மண்; இம்மண்ணை உண்டோர் நோய் நீங்கிச் சுகமுறுதல் கண்கூடு. சித்தாமிர்தம்: ஆலயத்துள்ளது; தீர்த்தங்களுள் தலைமை பெற்றது.
|