| அருவென்ன வுருவென்ன வன்றென்ன நின்றவனொ | | டம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
415. | ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப | | தொருதெய்வ முண்டெனவெடுத் | | துரையாலுணர்த்துவதை யொழியவெவ ரெவரெகட்கும் | | ஊன்கண் ணுளக்கண்ணதாம் | | விழியாக முன்னின்று தண்ணளி கரந்தவர்கள் | | வேண்டிய வரங்கொடுப்பான் | | மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில் | | வேறில்லை யென்றுணர்தியாற் | | பொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப் | | புத்தேள் பெரும்புவனமும் | | பொன்னுலகு மண்ணுலகு மெவ்வுலகு வேண்டினும் | | பொருளன் றிவற்குமற்ற | | அழியாத வீடுந் தரக்கடவ னிவனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுலி தழையவரு கந்தனுடன் | | |
416. | நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர் | | நிரைததூணம் வீக்கியார்த்து | | நிற்குங் குறட்பூத மொன்றினை விடுத்துடலின் | | நெடியபழு வென்புநெரியக் |
415. (அடி, 1) ஊன்கண் - புறக்கண்.
(2) மெய்கண்ட தெய்வம் - உண்மையாகக் கண்ணிற் கண்ட கடவுள்; “கண்கண்ட தெய்வம்” (709) என்பதுபோல நின்றது.
(3) பொழியாத புயல்: திருமால். அவர் தங்கு புவனம் வைகுண்டம். திசைமுகப் புத்தேள் - பிரமலோகம்.
416. இது முதல் தண்டம் கூறப்படும்.
(அடி, 1-2) வைத்தீசுவரன் கோயிலில் பிசாசினாற் பீடிக்கப்பட்டார் வழிபட்டு அதினின்றும் நீங்கி அருள்பெறுஞ் செய்திலா நினைந்து இது கூறினார்.
|