| கட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக் | | கணநாதர் கடுகமுடுகிக் | | கடல்வாய் திறந்தெனப் பிலவாய் திறந்தலறு | | காட்சிநீ காணாயலை | | மட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர் | | வாய்புதைத் தஞ்சிநிற்ப | | வருகென் றழைத்திடவும் வாரா திருத்தியால் | | மற்றிவன் முனிந்தாலுனக் | | கட்டதிக் கினிலுமொரு திக்கிலையெ னையனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
417. | குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர | | குடித்திட விடுத்துநின்றான் | | குண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங் | | குருதிபொங் கப்புடைத்தான் |
கரும்பேய்கள்: எழுவாய். மயிராகிய வரிசையாயுள்ள தூண்கள். பழுவென்பு - விலா வெலும்பு. கொடிறு உடைத்து அடி - கன்னத்தில் அறை. கணநாதர் பூதமொன்றினை விடுத்துக் கடுக. பேய்கள் வாய் திறந்து அலறு காட்சி.
(3) கமலன் - பிரமதேவர்.
(4) திக்கு - புகலிடம்; “திக்குவே றில்லை நீயே” (இராம நாடகம்.)
417. இதன்கண் முருகக் கடவுள் இயற்றிய நிக்கிரகச் செயல்கள் கூறப்படும்.
(அடி, 1) குடுமி - உச்சி. வேற்படை குன்றை யூடுருவிச் சென்ற அப்பொழுதே அதன்கண் மறைந்து நின்ற சூரனையும் ஊடுருவியதென்பது ஒரு சாரார் கொள்கை; அதற்கேற்ப இங்கே பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; “ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடறப், பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்” (தக்க. 5) என்பதையும் அதன் உரை முதலியவற்றையும் பார்க்க. குண்டிகைக் கள்வன் - பிரமதேவர்; குண்டிகை - அவர் கையிலுள்ள நீர்க் கரகம்.
|