பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்313

இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல்
    எண்மரும் பிறருமொருஞான்
றெதிர்நின் றுடற்றியவர் பட்டபா டறியா
    திருத்தியலை யதுகிடக்க
முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன
    முடியமரர் மொத்துண்டநாள்
முழுமதிக் கடவுணீ யவமதிப் புண்டது
    மொழிந்திடக் கடவதன்றால்
அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீயாடவாவே.    
(8)

418.
தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித்    
    தடங்கரை விடுப்பவனுனைத்
தலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடிற்
    றண்ணளி சுரந்துகருணை
வெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன்    
    வெகுளாது விடினுமழுது
விழிசிவப் பக்காணி னிரவிபகை சாய்த்தவிள
    வீரன் பொறுப்பானலன்
கள்ளம் பழுத்தகட் கடையியர் சிறார்திரைக
    காவிரித் தண்டுறைதொறும்
கதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக்
    கலைமதிக் கலசவமுதை

    (2) குலிசன் - இந்திரன், எண்மர் - திக்குப் பாலகர் எட்டுப் பேர் (பரி. 5:51-6)

    (3) தக்கயாகத்தில் வீரபத்திரக் கடவுள் சந்திரனைத் தேய்த்தருளினார்.

    (4) கணக்கு - நியாயம்; “கலிப்பாவென் றோதல் கணக்கோ” (தமிழ்விடு. 81.)

    418. (அடி, 1) பவக்கடல் - பிறவியாகிய கடல்.

    (2) இரவி பகை - பானுகோபன். அவனைச் சாய்த்த இளவீர னென்றது வீரவாகு தேவரை.