| அள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழைவரு கந்தனுடன் | | |
419. | தன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும் | | தாணிழற் கீழ்நிற்பவிச் | | சகதண்ட மண்டல மடுக்கழியு நாளமரர் | | தமையழக் காண்பவனிவன் | | நின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி | | நீள்கழற் றாளுதைந்து | | நெடுமலர்க் கண்பிசைந் தழுதழு தழைத்தனன் | | நினக்கிதில் வியப்பிலைகாண் | | பின்னற் றிரைச்சுர நதித்தண் துறைத்தேவர் | | பேதைக் குழாங்களென்னப் | | பெருகுந் தடம்புன்ற் காவிரிப் பூவிரி | | பெருந்தண் டுறைச்சிறைவிரித் | | தன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன் | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
419. (அடி, 1) தெய்வச்சிறார் - விநாயகர் முதலியோர். இளவீரர் - நவவீரர்கள். சகதண்டமண்டலம் - பூமியும் அண்ட கோளங்களும். அடுக்கழியும் நாள் - தம் நிலையழியும் சர்வ சங்கார காலத்தில். அமரர்தாமும் அக்காலத்து அழிவராதலின் அவர் அழுதனர்.
(2)பொருட்படுத்து - ஒரு பொருளாகக் கருதி.
(3-4) ஆகாய கங்கையில் தெய்வமகளிர் விளையாடுவதைப் போலக் காவிரி நதியில் அன்னங்கள் ஆடின.
சுரநதி - ஆகாய கங்கை. தேவர் பேதைக் குழாங்கள் - தெய்வ மகளிர் கூட்டங்கள்.
|