பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்315

8.சிற்றிற் பருவம்

420.
குறுமென் னடையு நெடுவெணிலாக்
    கோட்டு நகையும் வாட்டடங்கண்
குளிர முகந்துண் டொளிர்சுட்டிக்
    குஞ்சி திருத்தி நறுங்குதலை
முறுகு நறைத்தேன் கனிபவள
    முத்துண் டுச்சி மோந்துகொண்டுன்
முகமுந் துடைத்து விளையாட
    முன்றிற் புறத்துப் பொன்றதும்பி
இறுகும் புளகக் கும்பமுலை
    என்றி ராட்டி விடுத்ததுமற்
றிளையார் மறுக மறுகுதொறும்
    இடுக்கண் செயற்கோ வெந்தாய்நின்
சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற்
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.    
(1)

421.
கொழுநாண் மலர்க்கற் பகமுநறைக்
    குரவு நாறு நறுங்குஞ்சிக்
கோமான் மகனே நங்கள்குலக
    கொழுந்தே யென்று குறையிரந்து
தொழுவா னவர்த முடிசூட்டும்
    சோதி முடியிற் றுகளெழநின்

    420. இச்செய்யுளின் முற்பகுதியில் உமாதேவியார் முருகக் கடவுளுக்கு அணியணிந்து விளையாட விட்ட செய்தி கூறப்படும்.

    (அடி, 2) முறுகு நறைத் தேன் - முதிர்ந்த மணமுள்ள தேன். பவள முத்துண்டு - திருவாயின் முத்தங் கொண்டு.

    (3) எம்பிராட்டி - உமா தேவியார், மறுக - வருந்த. மறுகு தொறும் - வீதிதோறும். இடுக்கண் செயற்கோ விடுத்தது?

    421. (அடி, 1) குஞ்சி - முருகக் கடவுளது தலைமயிர். குஞ்சியையுடைய மகன். கோமான் - சிவபெருமான்.

    (2) முடி சூட்டும் சோதி முடி - தலையின்கண் அணியும் சோதியையுடைய கிரீடம். வண்டல் துறை - மகளிர் விளையாடும் இடம். முருகக்