பக்கம் எண் :

316குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

துணைத்தாள் வண்டற் றுறைப்புழுதித்
    தூளி படினும் படுகசுடர்க்
கழுவா மணியு நிலவுவிரி
    கதிர்நித் திலமு முமையம்மை
கண்ணி லுறுத்த வடிகேணின்
    காலி லுறுத்தல் கடனன்றாற்
செழுநான் மறையின் பெருஞ்செல்வச்
    செருக்கே சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.    
(2)

422.
வழிக்குப் புறம்பா யாமிழைத்த
    வண்டன் மனையவ் வசுரேசன்
வான்கூட் டுண்பா னடுக்கடலில்
    வகுத்த நகரன் றிகழாமே
கொழிக்குஞ் சிறுமுற் றிலில்வாரிக்
    கொடுவந் தடியே மனைமுன்றிற்
குவியா நின்ற மணிக்குவையக்
    குருகு பெயர்க்குன் றமுமன்றாற்
சுழிக்குண் டகழி வாய்மடுப்பச்
    சுடர்வால் வளைத்தெண் டிரைக்கரத்தாற்
சுரபி சொரிபான் மடையடைத்த
    சோற்றி னோடுங் கலந்தூட்டிச்

கடவுள் திருவடியில் வண்டற்புழுதி படின், அப்புழுதி அவ்வடியின்கண் வீழ்ந்து வணங்கும் தேவர்கள் திருமுடியிற் படும்.

    (3) மணியும் நித்திலமும் மகளிர் சிற்றிலில் உள்ளவை. அடிகேள் - சுவாமீ. முருகக் கடவுள் திருவடியில் மணியும் நித்திலமும் உறுத்துவதை உமாதேவியார் காணப்பொறாரென்பது கருத்து. ‘கண்ணிலுறுத்தல்’ என்பது காணப்பொறாமையைக் குறிக்கும் வழக்கு.

    422. (அடி, 1) வழிக்குப் புறம்பாயென்றது ‘நீ நடப்பதற்கு இடையூறு செய்வதன்று’ என்னும் குறிப்புடையது. வண்டன் மனை - சிற்றில். அசுரேசன் - சூரபன்மன். வான் கூட்டுண்பான் - தேவலோகத்தைக் கொள்ளையடித்தற் பொருட்டு. நகர் - வீர மகேந்திரம்.

    (2) முற்றில் - சுறுசுளகு. குருகுபெயர்க்குன்றம் - கிரவுஞ்சகிரி.

    (3-4) காவிரியின் சிறப்புக் கூறப்படும். சுழிக்குண்டசுழி - சுழியையுடைய ஆழமாகிய கடல். வாய்மடுப்ப - உண்ண. வளைத்தெண்டிரைக்