பக்கம் எண் :

318குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

424.
பொன்னங் கொடிபோ னுடங்குமிடைப்
    புத்தேண் மகளிர் விளையாடப்
புனைமா ளிகையுஞ் சூளிகையும்
    புதுக்கிக் கொடுத்தாய் பொதுஞானம்
மெய்ந்நின் றவருள் விழிப்பாவை
    விளையாட் டயர வழியாத
வீடுங் கொடுத்தா யெம்மனையும்
    விடுத்துச் சென்றான் மிகையுண்டோ
பின்னுந் திரைத்தீம் புனற்கங்கைப்
    பேராற் றூற்று நறைக்கோட்டுப்
பெருங்கற் பகத்தின் கழுத்தொடியப்
    பிறழும் வாளைப் பகடுதைத்த
தென்னம் பழம்வீழ் சோணாடா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.        
(5)

425.
கானக் குறப்பெண் குடியிருந்த
    கன்னிப் புனத்துத் தினைமாவும்
கமழ்தேன் றெளிவு முண்டுசுவை
    கண்டா யென்றே மதுவல்லால்

    424. (அடி, 1) புத்தேள் மகளிர் - தேவசாதிப் பெண்கள். சூளிகை - உச்சியறை. சூரபன்மனை வென்று தேவரைச் சிறைமீட்டு அவர் வாழ்வை உதவியமையை நினைந்து இங்ஙனம் கூறினார்.

    (1-2) பொதுஞான மெய்ந்நின்றவர் - பொதுஞானத்திலும் மெய்ஞ்ஞானத்திலும் முறையே நின்றவர்கள்; மெய் - மெய்ஞ்ஞானம். பொதுஞான நின்றவர் மெய்ந்நின்றவரென்று கூட்டிப் பொதுஞானத்தினின்றும் நீங்கினவர்களாகி மெய்ஞ்ஞானத்தின்கண் நின்றவர்க ளென்பதும் ஒன்று. உள்விழிப்பாவை - உண்முக விழியாகிய மெய்ஞ்ஞானக் கண்ணினுள் இலகும் பாவை. அது விளையாட்டயருதலாவது சிவானந்தத்தை நுகர்தல். வீடு - முத்தி; இல்ல மென்பது மற்றொரு பொருள். எம்மனை - யாம் சமைக்கும் சிற்றில்.

    (3) கங்கைப் பேராற்றின்கண் ஊற்றும் தேனையும் கிளைகளையும் உடைய உடைய கற்பகம். வாளைப் பகடு - ஆண்வாளை. உதைத்த - உதைத்ததனால் உதிர்ந்த.

    425. (அடி, 1) கானக் குறப்பெண் - வள்ளிநாயகியார். புனம் - தினைக்கொல்லை.